Images
  • tokyo olympics
    (கோப்புப் படம்: REUTERS/Issei Kato)

ஒலிம்பிக் போட்டிகளுக்கான பணிகளை மும்முரமாகத் தொடரும் ஜப்பான்

தோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஏற்பாட்டுப் பணிகளை ஜப்பான் நிறுத்தாமல் தொடர்ந்து செய்து வருகிறது.

போட்டியைத் திட்டமிட்டபடி இவ்வாண்டு நடத்த ஜப்பான் எண்ணம் கொண்டுள்ளது.

கடந்த ஆண்டு நடக்கவேண்டிய ஒலிம்பிக் போட்டிகள் COVID-19 நோய்த்தொற்று காரணமாக இந்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தற்போது ஜப்பானில் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.

தோக்கியோவில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டிருப்பதால் போட்டிகள் நடக்குமா என்ற கேள்வி எழுந்தது.

ஆனால் ஜப்பான் போட்டியை நடத்தியே ஆகவேண்டும் என்று உறுதியாக இருக்கிறது.

இவ்வாண்டின் கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கு ஜப்பானிய மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

 

Top