Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

ஸ்காட்லந்து மீதான ரக்பி போட்டி வெற்றியை உள்நாட்டில் கண்டு ரசித்த 50 மில்லியன் ஜப்பானியர்கள்

ஜப்பானில் தற்போது உலகக் கிண்ண ரக்பி போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

வாசிப்புநேரம் -
ஸ்காட்லந்து மீதான ரக்பி போட்டி வெற்றியை உள்நாட்டில் கண்டு ரசித்த 50 மில்லியன் ஜப்பானியர்கள்

படம்: REUTERS

ஜப்பானில் தற்போது உலகக் கிண்ண ரக்பி போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

ஆசியாவில் உலகக் கிண்ண ரக்பி போட்டிகள் நடப்பது இதுவே முதல் முறை.

போட்டியை ஏற்று நடத்தும் ஜப்பானைக் கடந்த வாரம் பெரும் சூறாவளி தாக்கியது, அதில் பல வட்டாரங்கள் சேதமடைந்தான.

இருப்பினும் ஜப்பான் அணிக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கினர் அந்நாட்டு ரசிகர்கள்.

ஜப்பானும், ஸ்காட்லந்தும் மோதிய ஆட்டத்தை சுமார் 55 மில்லியன் ரசிகர்கள் தொலைக்காட்சியில் கண்டு ரசித்ததாக ஜப்பானைச் சேர்ந்த Nippon தொலைக்காட்சி நிறுவனம் தெரிவித்தது.

அந்த ஆட்டத்தை ஜப்பான் வென்று காலிறுதிக்கு முன்னேறியது.
அது, நாளை தென்னாப்பிரிக்காவைச் சந்திக்கிறது.

தொடர்ந்து மூன்றாவது முறையாக நியூசிலந்து ரக்பி உலகக் கிண்ணத்தை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்