Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

தோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள்: வெளிநாட்டு ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்களா? நாளை தெரிய வரலாம்

 தோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள்: வெளிநாட்டு ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்களா? நாளை தெரிய வரலாம்

வாசிப்புநேரம் -

தோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளைக் காண வெளிநாட்டிலிருந்து ரசிகர்கள் வர அனுமதிக்கப்படுவார்களா என்பதைப் போட்டி ஏற்பாட்டுக் குழுவினர் நாளை விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்பாட்டுக் குழுவினர் நாளை மாலை ஜப்பான் அரசாங்க அதிகாரிகளைச் சந்திக்கவிருக்கின்றனர்.

அதில் வெளிநாட்டு ரசிகர்களை அனுமதிப்பது பற்றிக் கலந்தாலோசிக்கப்படலாம்.

தோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் ஏற்பாட்டுக்குழு, அனைத்துலக ஒலிம்பிக் குழு, அனைத்துலக உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் குழு, தோக்கியோ நகர அரசாங்கம், ஜப்பான் மத்திய அரசாங்கம் ஆகியவற்றின் அதிகாரிகள் சந்திப்பில் இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

COVID-19 காரணமாக கடந்த ஆண்டு நடக்க வேண்டிய ஒலிம்பிக் போட்டி இந்த ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

போட்டிகளை வரும் ஜூலை மாதம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு இன்னும் 3 மாதங்களே உள்ளன.

- Reuters 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்