Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

ஒலிம்பிக் சுவாரஸ்யங்கள்: நடுவர் முகத்தில் தேக்வாண்டோ திறமையைக் காட்டிய விளையாட்டாளர் - வாழ்நாள் ஒலிம்பிக் தடை

தோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் விரைவில் தொடங்கவிருக்கின்றன. அதையொட்டி, ஒலிம்பிக் விளையாட்டுகளில் இதுவரை நடந்த சில சுவாரஸ்யமான தகவல்கள் 'செய்தி' ரசிகர்களுக்காக...

வாசிப்புநேரம் -

தோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் விரைவில் தொடங்கவிருக்கின்றன. அதையொட்டி, ஒலிம்பிக் விளையாட்டுகளில் இதுவரை நடந்த சில சுவாரஸ்யமான தகவல்கள் 'செய்தி' ரசிகர்களுக்காக...

ஒலிம்பிக் போட்டியின் தீர்ப்புத் தனக்குச் சாதகமாக இல்லாததால், தீர்ப்பளித்த நடுவரையே முகத்தில் உதைத்தார் ஒரு விளையாட்டு வீரர்.

2008ஆம் ஆண்டில் சீனாவில் நடைபெற்ற ஒலிம்பிக் தேக்வாண்டோ (Taekwondo) போட்டியில் கலந்துகொண்டார் கியூபாவைச் சேர்ந்த ஏஞ்சல் மாட்டோஸ் (Ángel Matos).

கஜகஸ்தானின் அர்மன் சில்மனோவுக்கு (Arman Chilmanov) எதிரான போட்டியின்போது, மாட்டோஸ் 1 நிமிடத்திற்கும் மேலாக ஓய்வு எடுத்துக்கொண்டார். அதனால், அவர் போட்டியிலிருந்து நீக்கப்பட்டார்.

அதை ஏற்றுக்கொள்ள மறுத்த மாட்டோஸ், நடுவர் ஒருவரின் முகத்தை எட்டி உதைத்தார்.

அதையடுத்து, அவருக்கும் அவரின் பயிற்றுவிப்பாளருக்கும், ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ள வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்