Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

இணையத்தில் தீ போல் பரவும் அமெரிக்க வீராங்கனையின் சீருடற் பயிற்சி காணொளி

இசைக்கு ஏற்ற துடிப்பான நடன அசைவுகளுடன் சவால்மிக்க குட்டிக்கரணங்கள். பெண்கள் சீருடற் பயிற்சிப் போட்டியில் பங்கேற்ற வீராங்கனையின் காணொளி இணையத்தில் தீயாய்ப் பரவியுள்ளது.

வாசிப்புநேரம் -
இணையத்தில் தீ போல் பரவும் அமெரிக்க வீராங்கனையின் சீருடற் பயிற்சி காணொளி

(படம்: AP Photo/Ben Liebenberg)

இசைக்கு ஏற்ற துடிப்பான நடன அசைவுகளுடன் சவால்மிக்க குட்டிக்கரணங்கள். பெண்கள் சீருடற் பயிற்சிப் போட்டியில் பங்கேற்ற வீராங்கனையின் காணொளி இணையத்தில் தீயாய்ப் பரவியுள்ளது.

கல்லூரிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் அமெரிக்காவின் UCLA பல்கலைக்கழக மாணவி கேட்லின் ஒஹாஷி (Katelyn Ohashi) பார்வையாளர்களைக் கவர்ந்தார்.

சூடுபிடித்துக்கொண்டிருந்த போட்டியில் அமைதியாகப் பங்கேற்ற அவர் தரைப் பயிற்சியைப் புன்னகையோடு செய்து முடித்தார்.

போட்டியில் முழு மதிப்பெண்களை அனாயசமாகத் தட்டிச்சென்றார்.

லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் இந்த மாதத் தொடக்கத்தில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்ற 21 வயது கேட்லினின் காணொளி, Twitter-இல் 41 மில்லியன் முறை பார்க்கப்பட்டது.

துடிப்பான அந்தத் தரைப் பயிற்சியின் காணொளி இதோ: 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்