Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

ஒலிம்பிக் விளையாட்டுகளில் இறுதி முறையாக நடந்த போட்டி

ஒலிம்பிக் விளையாடுகளில் இறுதி முறையாக, ஆண்கள் 50 கிலோமீட்டர் நடைப் போட்டி இன்று நடைபெற்றது.

வாசிப்புநேரம் -
ஒலிம்பிக் விளையாட்டுகளில் இறுதி முறையாக நடந்த போட்டி

(படம்: Charly TRIBALLEAU / AFP)

ஒலிம்பிக் விளையாடுகளில் இறுதி முறையாக, ஆண்கள் 50 கிலோமீட்டர் நடைப் போட்டி இன்று நடைபெற்றது.

அதில் போலந்தின் டேவிட் தொமாலா (Dawid Tomala), தங்கம் வென்றார்.

ஒலிம்பிக்கில் பெண்களுக்கு, உரிய விகிதம் வழங்கப்படாத ஒரே நிகழ்வு, 50 கிலோமீட்டர் நடைப் போட்டி.

பாலின சமத்துவம் தொடர்பான விதிக்கு ஏற்ப அந்தப் போட்டி அமையவில்லை என்பதால், அது 2024 ஒலிம்பிக் விளையாட்டுகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், விளையாட்டாளர்கள் அந்த முடிவைச் சாடியுள்ளனர்.

விளையாட்டை நீக்குவதை ஒரு தவறான செயல் என்று சிலர் குறிப்பிட்டனர்.

1932 ஒலிம்பிக்கில் நடைப் போட்டி அறிமுகம் செய்யப்பட்டது. 1976 ஐத் தவிர மற்ற எல்லா ஒலிம்பிக்கிலும் அந்தப் போட்டி இடம்பெற்றது.

தோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளை நேரடியாக meWATCH தளத்தின் 14 பிரத்தியேக ஒளிவழிகளில் காணலாம். meWATCH.sg/tokyo2020 என்ற இணையப்பக்கத்தை நாடுங்கள்; சிங்கப்பூரின் ஒலிம்பிக் கட்டமைப்பான மீடியாகார்ப்புடன் இணைந்திருங்கள்!

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்