Images
  • lee chong wei
    (படம்: AFP/Saeed Khan)

புற்றுநோய் சிகிச்சைக்குப் பிறகு 5 கிலோகிராம் குறைந்தார் லீ சோங் வெய்

மலேசியாவின் பிரபல பேட்மின்ட்டன் வீரர் லீ சோங் வெய் புற்றுநோய் சிகிச்சைக்குப் பிறகு உடல்நலம் நன்கு தேறிவருவதாக மலேசிய பேட்மின்ட்டன் சம்மேளனம் தெரிவித்திருக்கிறது.

புற்றுநோய் சிகிச்சைக்குப்பின் லீ 5 கிலோகிராம் எடை குறைந்ததாகவும் அது குறிப்பிட்டது.

தற்போது லீ மிகவும் உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதாகவும், அவருக்கு இன்னும் மூன்று வாரங்களுக்கு நல்ல ஓய்வு தேவைப்படுவதாகவும் சம்மேளனத்தின் தலைவர் கூறினார்.

சில மாதங்களுக்கு முன்னர் லீக்கு மூக்கில் புற்றுநோய் ஆரம்பக்கட்டத்தில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து அவர் தைவானில் உள்ள மருத்துவமனையில் இரண்டு மாதங்களாகச் சிகிச்சை பெற்று கடந்த வாரம் மலேசியா திரும்பினார்.

கூடிய விரைவில் பேட்மின்ட்டன் போட்டிகளில் பங்கேற்கப் போவதாகவும் லீ அண்மையில் தெரிவித்திருந்தார்.

Top