Images
  • lee chong wei
    (படம்: AFP/Saeed Khan)

புற்றுநோயிலிருந்து மீண்டு ஒலிம்பிக் போட்டிக்குத் தயாராகும் லீ சோங் வெய்

புற்றுநோயிலிருந்து மீண்டுவந்த பிரபல பேட்மின்ட்டன் வீரர் லீ சோங் வெய் தற்போது ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தயாராகி வருகிறார்.

சில மாதங்களுக்கு முன்னர் லீக்கு மூக்கில் புற்றுநோய் ஏற்பட்டு அது ஆரம்பக்கட்டத்தில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து அவர் தைவானில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

உடல்நலம் முழுமையாகத் தேறியிருக்கும் லீ தற்போது சிறிய அளவில் பயிற்சிகளைத் தொடங்கிவிட்டதாகவும் இன்னும் இரு வாரங்களில் முழுமையாகப் பயிற்சியில் ஈடுபடவிருப்பதாகவும் மலேசிய பேட்மின்ட்டன் சம்மேளனத்தின் அதிகாரிகள் கூறினார்.

36 வயதாகும் லீ ஒலிம்பிக் போட்டிகளில் மூன்று முறை வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

அடுத்த ஒலிம்பிக் போட்டிகள் 2020 ஆம் ஆண்டு தோக்கியோவில் நடைபெறவுள்ளன.
 

Top