Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

இந்தோனேசியப் பொதுவிருது ஒற்றையர் இறுதிச்சுற்று: சிங்கப்பூரின் லோ கீன் யூவை வென்றுள்ள டென்மார்க்கின் விக்டர் எக்செல்சன்

இந்தோனேசிய பேட்மிண்டன் பொதுவிருது ஒற்றையர் இறுதிச்சுற்றில் சிங்கப்பூரின் லோ கீன் யூவை (Loh Kean Yew) டென்மார்க்கின் விக்டர் எக்செல்சன் (Viktor Axelsen) வென்றுள்ளார்.

வாசிப்புநேரம் -
இந்தோனேசியப் பொதுவிருது ஒற்றையர் இறுதிச்சுற்று: சிங்கப்பூரின் லோ கீன் யூவை வென்றுள்ள டென்மார்க்கின் விக்டர் எக்செல்சன்

படம்: SNOC

இந்தோனேசிய பேட்மிண்டன் பொதுவிருது ஒற்றையர் இறுதிச்சுற்றில் சிங்கப்பூரின் லோ கீன் யூவை (Loh Kean Yew) டென்மார்க்கின் விக்டர் எக்செல்சன் (Viktor Axelsen) வென்றுள்ளார்.

உலகத் தர வரிசையில் இரண்டாம் இடத்திலுள்ள எக்செல்சனை எதிர்த்து லோ இன்று பிற்பகலில் போட்டியிட்டார்.

லோ, போட்டியில் வெற்றிபெறாவிட்டாலும் இது அவருக்குத் தனிப்பட்ட முறையில் ஒரு
மைல் கல்லாக அமைகிறது.

உலகத் தரவரிசையில் 26ஆம் நிலையில் இருக்கும் லோ, முதன்முறையாக உலக பேட்மிண்டன் சம்மேளனத்தின் Super 1000இன் இறுதிச்சுற்றில் போட்டியிடத் தகுதி பெற்றிருந்தார்.

எனினும் லோ இன்றைய போட்டியில் வெல்லாததால் இந்த வாரம் இடம்பெறவுள்ள உலக இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி பெறவில்லை.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்