Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

வெற்றிக் கதைகள் - பயத்தை பலமாக மாற்றிய நீச்சல் அரசன் மைக்கல் ஃபெல்ப்ஸ்

வெற்றிக் கதைகள் - பயத்தை பலமாக மாற்றிய நீச்சல் அரசன் மைக்கல் ஃபெல்ப்ஸ்

வாசிப்புநேரம் -

தோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் இன்னும் சில வாரங்களில் தொடங்கவுள்ளன.

COVID-19 நோய்ப்பரவலால் துவண்டு போகாமல் இருக்க சில விளையாட்டு நட்சத்திரங்களின் வெற்றிக் கதைகளை வெளியிட்டு வருகிறது Olympics இன்ஸ்டாகிராம் பக்கம்.

"செய்தி" ரசிகர்களுக்காக அவை தமிழில்...

மைக்கல் ஃபெல்ப்ஸ் - நீச்சல் வீரர்

  • நாடு - அமெரிக்கா
  • பிறந்த ஆண்டு: 1985
  • நீச்சல் உலகின் அரசன் என்றழைக்கப்படும் மைக்கல் ஃபெல்ப்ஸ்....ஒலிம்பிக் போட்டிகளின் தங்க மகன்!
  • 5 ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று 28 பதக்கங்கள் வென்றார். அதில் 23 தங்கப் பதக்கங்கள்.

(படம்: REUTERS/Stefan Wermuth)

  • 7 வயதில் சகோதரிகளுடன் நீச்சல் குளத்தில் இறங்கினார்.
  • தலையை நீரில் மூழ்கச் செய்வதற்குப் பயப்பட்ட ஃபெல்ப்ஸ், முதுகைக் கொண்டு பின்னோக்கி நீச்சலடிக்கத் தொடங்கினார்.
  • பயத்தை பலமாக மாற்றினார்.
  • பத்து வயதில் அமெரிக்க அளவில் நீச்சலில் பிரபலமானார்.
  • கடினமான பயிற்சி மேற்கொண்டார். 15 வயதில் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதிபெற்றார்.

  • 2000ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் ஏதும் கிடைக்கவில்லை
  • தினமும் 6 மணி நேரப் பயிற்சி, உடலை உறுதியாக வைத்துக்கொள்வதில் தீவிரம்.
  • 2004 ஒலிம்பிக் போட்டியில் 19 வயது ஃபெல்ப்ஸுக்கு 6 தங்கம் 2 வெண்கலப் பதக்கங்கள்.
  • 2008 ஒலிம்பிக்... கலந்துகொண்ட 8 போட்டியிலும் தங்கம். உலகமே ஆச்சரியத்தில் மூழ்கியது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்