Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

ஒலிம்பிக் சுவாரஸ்யங்கள்: காலணிகளின்றி ஓடித் தங்கம் வென்ற வீரர்

தோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் இன்று தொடங்குகின்றன. அதையொட்டி, ஒலிம்பிக் விளையாட்டுகளில் இதுவரை நடந்த சில சுவாரஸ்யமான தகவல்கள் 'செய்தி' ரசிகர்களுக்காக...

வாசிப்புநேரம் -
ஒலிம்பிக் சுவாரஸ்யங்கள்: காலணிகளின்றி ஓடித் தங்கம் வென்ற வீரர்

(படம்: AFP)

தோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் இன்று தொடங்குகின்றன. அதையொட்டி, ஒலிம்பிக் விளையாட்டுகளில் இதுவரை நடந்த சில சுவாரஸ்யமான தகவல்கள் 'செய்தி' ரசிகர்களுக்காக...

எத்தியோப்பியாவைச் (Ethiopia) சேர்ந்த நெடுந்தொலைவு ஓட்டப் பந்தய வீரர், சாத்தியமில்லை என்று பலரும் எண்ணும் காரியத்தைச் சாத்தியமாக்கிக் காட்டினார்.

1960ஆம் ஆண்டில், ரோம் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளின்போது, அபபே பிகிலா (Abebe Bikila) காலணிகளின்றி நெடுந்தொலைவு ஓட்டத்தில் ஓடித் தங்கப் பதக்கம் வென்றார்.

அவருக்குக் கொடுக்கப்பட்ட காலணிகள் சரியாகப் பொருந்தாததால், அவர் வெறுங்காலில் ஓடினார்.

அவர் காலணிகளின்றி ஓடியதோ சுமார் 41 கிலோமீட்டர் தூரம்.

ஒலிம்பிக் வரலாற்றிலேயே தங்கம் வென்ற முதல் ஆப்பிரிக்கர் என்ற பெருமையும் அவரைச் சேரும். 

தோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளை நேரடியாக meWATCH தளத்தின் 14 பிரத்தியேக ஒளிவழிகளில் காணலாம். meWATCH.sg/tokyo2020 என்ற இணையப்பக்கத்தை நாடுங்கள்; சிங்கப்பூரின் ஒலிம்பிக் கட்டமைப்பான மீடியாகார்ப்புடன் இணைந்திருங்கள்!

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்