Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

மென்செஸ்ட்டர் யுனைட்டட் அணியின் தற்காலிக நிர்வாகியாக சொல்ஸ்கியா நியமனம்

விளையாட்டாளராக, எதிரணியை மிரட்டும் குழந்தை முக நட்சத்திரம் என்ற பெயரைப் பெற்ற ஒலே குனா சொல்ஸ்கியா (Ole Gunnar Solskjaer) மென்செஸ்ட்டர் யுனைட்டட் அணியின் தற்காலிக நிர்வாகியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

வாசிப்புநேரம் -

விளையாட்டாளராக, எதிரணியை மிரட்டும் குழந்தை முக நட்சத்திரம் என்ற பெயரைப் பெற்ற ஒலே குனா சொல்ஸ்கியா (Ole Gunnar Solskjaer) மென்செஸ்ட்டர் யுனைட்டட் அணியின் தற்காலிக நிர்வாகியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தப் பருவம் முடியும் வரை அணியின் நிர்வாகியாகப் பொறுப்பு வகிப்பார் சொல்ஸ்கியா.

ஜோசே மொரின்யோ பணிநீக்கம் செய்யப்பட்ட பிறகு தற்காலிகமாக அந்தப் பொறுப்பு சொல்ஸ்கியாவிற்கு வழங்கப்படும் எனப் பரவலாகப் பேசப்பட்டது.

மென்செஸ்ட்டர் யுனைட்டடின் வரலாற்றில் தலைசிறந்த நட்சத்திரங்களில் ஒருவராக முத்திரை பதித்தவர் சொல்ஸ்கியா.

1999ஆம் ஐரோப்பிய வெற்றியாளர் போட்டியில் இறுதியாட்டத்தின் கடைசி நிமிடத்தில் யுனைட்டடுக்கு வெற்றி கோலை அடித்து ரசிகர்களின் மனத்தில் நீங்கா இடம்பிடித்தார்.

திடலில் 10 நிமிடம் இருந்தாலும் எதிரணிக்கு 10 யுகம் போல் இருக்கும், சொல்ஸ்கியா களமிறங்கினால்.

இப்போது நிர்வாகியாக, பெரிய அணியை நன்கு வழிநடத்தமுடியும் என்பதை நிரூபிக்கும் இலக்கைக் கொண்டுள்ளார் சொல்ஸ்கியா.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்