Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள மென்செஸ்ட்டர் யுனைட்டட் நிர்வாகி ஜோசே மொரின்யோ

இங்கிலீஷ் பிரிமியர் லீக் காற்பந்து அணியான மென்செஸ்ட்டர் யுனைட்டடின் நிர்வாகி ஜோசே மொரின்யோ (Jose Mourinho) பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

வாசிப்புநேரம் -
பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள மென்செஸ்ட்டர் யுனைட்டட் நிர்வாகி ஜோசே மொரின்யோ

(படம்: REUTERS/Neil Hall)

இங்கிலீஷ் பிரிமியர் லீக் காற்பந்து அணியான மென்செஸ்ட்டர் யுனைட்டடின் நிர்வாகி ஜோசே மொரின்யோ (Jose Mourinho) பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மொரின்யோவின் நிர்வாகத்தில் யுனைட்டட் அணி பல மாதங்களாகச் சோபிக்கவில்லை.

அணியின் விளையாட்டாளர்களுக்கும் அவருக்கும் இடையே கருத்துவேறுபாடுகள் இருந்ததாகவும் சொல்லப்பட்டது.

விறுவிறுப்பான விளையாட்டுக்குப் பிரபலமான யுனைட்டடின் ஆட்டத்தை மொரின்யோவின் உத்திகள் களையிழக்கச் செய்துவிட்டதாகவும் கூறப்பட்டது.

ஈராண்டுக்கு முன் அணியின் நிர்வாகியாகப் பதவியேற்றார் மொரின்யோ.

அவருக்குக் கீழ், அதிகம் செலவு செய்து பல விளையாட்டாளர்களை வாங்கியபோதும் யுனைட்டட் அதற்கேற்ற வண்ணம் ஆடவில்லை என்ற குற்றச்சாட்டு கடந்த சுமார் ஓராண்டாகவே இருந்துவந்தது.

தற்போது மென்செஸ்ட்டர் யுனைட்டட், பிரிமியர் லீக் பட்டியலில் ஆறாம் இடத்தில் உள்ளது.

அணி, முதல் 4 இடங்களுக்குள் நுழைய சிரமப்படுகிறது.

அதற்கும் நான்காம் இடத்தில் உள்ள செல்சிக்கும் (Chelsea)இடையே, 11 புள்ளிகள் வித்தியாசம்!

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்