Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

காற்பந்து பிரபலம் மரடோனா காலமானார்

காற்பந்து உலகில் தலைசிறந்த விளையாட்டாளர்களில் ஒருவராகக் கருதப்பட்ட, டியேகோ மரடோனா (Diego Maradona) காலமானார்.

வாசிப்புநேரம் -
காற்பந்து பிரபலம் மரடோனா காலமானார்

(படம்: AFP / Filippo MONTEFORTE)

காற்பந்து உலகில் தலைசிறந்த விளையாட்டாளர்களில் ஒருவராகக் கருதப்பட்ட, டியேகோ மரடோனா (Diego Maradona) காலமானார்.

ஆர்ஜென்டினாவைச் சேர்ந்த அவருக்கு 60 வயது.

தமது புவனோஸ் ஐரேஸ் (Buenos Aires) இல்லத்தில் இருந்தபோது, மரடோனா மாரடைப்பால் மாண்டதாய்த் தெரிவிக்கப்பட்டது.

சில வாரங்களுக்கு முன்னதாக அவர் மூளையில் உள்ள ரத்தக் கட்டியை அகற்றுவதற்காக அறுவைச் சிகிச்சை மேற்கொண்டார்.

1986 ஆண்டில், உலகக் கிண்ணத்தை ஆர்ஜென்டினாவுக்குப் பெற்றுத் தந்த பெருமை அவரைச் சேரும்.

அவரது மறைவை முன்னிட்டு, 3 நாள்களுக்குத் தேசிய அளவில் துக்கம் அனுசரிக்கப்படவுள்ளது.

புவனோஸ் ஐரேஸில் உள்ள அதிபர் மாளிகையில் மரடோனாவின் உடல் கிடத்திவைக்கப்படும் என அதிபரின் பேச்சாளர் தெரிவித்தார்.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்