Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

மறைந்த காற்பந்து விளையாட்டாளர் மரடோனாவின் சட்டை $2 மில்லியனுக்கு ஏலம்

மறைந்த காற்பந்து விளையாட்டாளர் மரடோனாவின் சட்டை $2 மில்லியனுக்கு ஏலத்தில் விடப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
மறைந்த காற்பந்து விளையாட்டாளர் மரடோனாவின் சட்டை $2 மில்லியனுக்கு ஏலம்

(படம்: REUTERS/Ricardo Moraes)

மறைந்த காற்பந்து விளையாட்டாளர் மரடோனாவின் சட்டை $2 மில்லியனுக்கு ஏலத்தில் விடப்பட்டுள்ளது.

1986 ஆம் ஆண்டின் உலகக் கிண்ணப் போட்டியின்போது இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில், 'Hand Of God' கோலைப் புகுத்தியபோது அவர் அணிந்திருந்த சட்டை அது.

மரடோனாவிடமிருந்து சட்டையைப் பெற்ற இங்கிலாந்து அணியின் முன்னாள் விளையாட்டாளர் ஸ்டீவ் ஹோட்ஜ் (Steve Hodge) அதை ஏலத்தில் விட்டுள்ளார்.

ஆட்டம் முடிந்து திடலை விட்டு வெளியேறும் முன்பு, தாங்கள் இருவரும் சட்டைகளை மாற்றிக்கொண்டதாய்க் கூறினார் ஹோட்ஜ்.

தற்போது இங்கிலாந்தின் தேசியக் காற்பந்து அரும்பொருளகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது அந்தச் சட்டை.

காற்பந்துப் பிரபலம் மரடோனாவின் மறைவிற்குப் பிறகு ரசிகர்களிடையே அவரின் பெயர் கொண்ட பொருள்கள் மீதான மோகம் அதிகரித்துள்ளதாக ஏல நிறுவனம் ஒன்று தெரிவித்தது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்