Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

வெற்றிக் கதைகள்: சாதிக்கப் பின்னணி முக்கியம்- பொய்யாக்கிய இந்தியக் குத்துச்சண்டை வீரர் மேரி கோம்

வெற்றிக் கதைகள்: சாதிக்கப் பின்னணி முக்கியம்- பொய்யாக்கிய இந்தியக் குத்துச்சண்டை வீரர் மேரி கோம் 

வாசிப்புநேரம் -

தோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கிவிட்டன.

COVID-19 நோய்ப்பரவலால் துவண்டு போகாமல் இருக்க சில விளையாட்டு நட்சத்திரங்களின் வெற்றிக் கதைகளை வெளியிட்டு வருகிறது Olympics இன்ஸ்டாகிராம் பக்கம்.

அவை இங்கு "செய்தி" ரசிகர்களுக்காக....

மேரி கோம் (Mary Kom)

விளையாட்டு: குத்துச் சண்டை

நாடு: இந்தியா

வயது : 38

ஒலிம்பிக் பதக்கம்: வெண்கலம் (2012)

  • சாதிக்க ஒரு பெரிய பின்னணி வேண்டும் என்பதை பொய்யாக்கியவர்களில் மேரி கோமும் ஒருவர்.
  • வெற்றிக்குத் தேவையான மனவுறுதி இருந்தால் போதும் என்று கூறி உலக அளவில் பல பெண்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர்.
  • இந்தியாவின் ஒரு சிறு கிராமத்தில் கூலித் தொழிலாளர்களுக்குப் பிறந்தவர் மேரி கோம்.

(படம்: REUTERS)

படம்: REUTERS

  • சிறு வயதில் இருந்தே உடன் பிறந்தவர்களைப் பார்த்துக்கொள்ள வேண்டியிருந்ததால், படிக்க நேரமில்லை.
  • படிப்பைப் பாதியில் விட்ட அவருக்கு ஏதாவது ஒரு விதத்தில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருந்தது.
  • 1998 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டில் பெண்கள் பிரிவில் இந்தியாவிற்குக் குத்துச் சண்டையில் தங்கம் கிடைத்தது.
  • அது இந்தியாவில் பெரிதாகக் கொண்டாடப்பட்ட தருணம். அது மேரி கோமையும் ஈர்த்தது.

(படம்: REUTERS)

படம்: REUTERS

  • ஈர்ப்பு என்றால் சாதாரண ஈர்ப்பு அல்ல....குத்துச் சண்டை தான் வாழ்க்கை என்று முடிவெடுத்தார்.
  • குடும்பத்திலும் சமூகத்திலும் பலத்த எதிர்ப்பு..'ஒரு பெண் முரட்டுத்தனமான குத்துச் சண்டைக்குச் செல்வதா?' ஆனால் அவற்றை எல்லாம் வெற்றியாக மாற்றி மூக்கில் விரல்வைக்க வைத்தார் மேரிகோம்.
  • தொடர்ந்து தேசிய அளவில் 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்றார்.
  • குத்துச் சண்டைப் போட்டியில் மேரி கோமின் ஒவ்வொரு அடியும் இடியாக மாறியது.

(படம்: REUTERS)

படம்: REUTERS

  • ஆசிய அளவிலும் காமன்வெல்த் போட்டிகளிலும் பதக்கங்களைக் குவிக்கத் தொடங்கினார்.
  • ஒலிம்பிக் அரங்கில் பெண்கள் பிரிவு குத்துச் சண்டையில் முதல்முறையாக இந்தியா தகுதிபெற்றது... காரணம் மேரி கோம்.
  • 2012 ஒலிம்பிக் போட்டியில்வெண்கலம் வென்று சரித்தரம் படைத்தார்.
  • 2016 ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதிபெறத் தவறினார்.

(படம்: REUTERS)

படம்: REUTERS

  • 2020 ஆம் ஆண்டில் கட்டாயம் தங்கப்பதக்கம் வெல்ல வேண்டும் என்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டார்.
  • 4 பிள்ளைகளுக்குத் தாயான மேரி கோமிற்கு
  • தோக்கியோ ஒலிம்பிக் போட்டி தான் தங்கம் வெல்லக் கிடைத்த கடைசி வாய்ப்பு. அதனால் அவர் கடினமாகப் போராடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • மேரி கோமின் வெற்றியை எதிர்பார்த்துப் பல மில்லியன் பேர் காத்திருக்கின்றனர்.

தோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளை நேரடியாக meWATCH தளத்தின் 14 பிரத்தியேக ஒளிவழிகளில் காணலாம். meWATCH.sg/tokyo2020 என்ற இணையப்பக்கத்தை நாடுங்கள்;
சிங்கப்பூரின் ஒலிம்பிக் கட்டமைப்பான மீடியாகார்ப்புடன் இணைந்திருங்கள்!
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்