Images
  • olympic medal ceremony
    (படம்: AFP/Jonathan Nackstrand) 

தோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள்: பதக்கமளிப்பு நிகழ்ச்சியில் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயம்

தோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கமளிப்பு நிகழ்ச்சியில் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயம் என அனைத்துலக ஒலிம்பிக் குழு வலியுறுத்தியுள்ளது.

நீச்சல் போட்டிகளின் வெற்றியாளர்கள், பதக்கமளிப்பு நிகழ்ச்சியில் முகக்கவசங்களை அகற்றி ஒருவரை ஒருவர் கட்டியணைத்தனர்.

அது COVID-19 விதிகளை மீறுவதாகும் எனக் கருதப்படுகிறது.

ஒலிம்பிக் சம்பந்தப்பட்ட அனைத்து இடங்களிலும் முகக்கவசம் அணிவது கட்டாயம்.

இதற்கிடையில், ஒலிம்பிக் போட்டிகள் தொடர்பிலான கிருமித்தொற்றுச் சம்பவங்கள் 132க்கு உயர்ந்துள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தகவல் அளித்துள்ளனர். மேலும் 10 பேருக்கு நேற்றுக் கிருமித்தொற்று உறுதியானது. 

தோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளை நேரடியாக meWATCH தளத்தின் 14 பிரத்தியேக ஒளிவழிகளில் காணலாம். 

meWATCH.sg/tokyo2020 என்ற இணையப்பக்கத்தை நாடுங்கள்;
சிங்கப்பூரின் ஒலிம்பிக் கட்டமைப்பான மீடியாகார்ப்புடன் இணைந்திருங்கள்!

-Reuters

Top