Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் காற்பந்து ஆட்டம் பாதியில் நிறுத்தம் - இனவாதக் கருத்துகளைக் கூறினாரா நடுவர்?

சாம்பியன்ஸ் லீக் காற்பந்து ஆட்டம் பாதியில் நிறுத்தம் - இனவாதக் கருத்துகளைக் கூறினாரா நடுவர்?

வாசிப்புநேரம் -
சாம்பியன்ஸ் லீக் காற்பந்து ஆட்டம் பாதியில் நிறுத்தம் - இனவாதக் கருத்துகளைக் கூறினாரா நடுவர்?

படம்: REUTERS

சாம்பியன்ஸ் லீக் காற்பந்து போட்டி ஒன்றில் நடுவர் இனவாத சொற்களைப் பயன்படுத்தியதாக சந்தேகம் எழுந்ததால் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது.

இன்று அதிகாலை இடம்பெற்ற குழுப்பிரிவு போட்டியில் பாரிஸ் செயிண்ட் ஜெர்மெய்ன் (Paris Saint-Germain) அணியும் இஸ்தான்புல் பிஸாகஷ்ர் (Istanbul Basaksehir) அணியும் மோதின.

ஆட்டத்தின் 14 ஆம் நிமிடத்தில் பிரச்சினை தொடங்கியது.

இஸ்தான்புல் அணியின் துணைப் பயிற்றுவிப்பாளர் விளையாட்டு திடல் எல்லைக்கு அருகே நெருக்கமாக இருப்பதாகக் கூறி நான்காவது போட்டி நடுவர் சிவப்பு அட்டை வழங்கினார்.

போட்டி நடுவர் தம்மை நோக்கி இனவாதச் சொற்களைப் பயன்படுத்தியதாகத் துணைப் பயிற்றுவிப்பாளர் கூற இரு அணி வீரர்களும் ஆட்டத்தை நிறுத்தினர்.

நாளை அதிகாலை 4 மணிக்கு, முன்னர் நிறுத்தப்பட்ட நேரத்திலிருந்து இருந்து மீண்டும் ஆட்டம் தொடங்கும். அதில் வேறு நடுவர் குழுவினர் பங்கேற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

சம்பவம் குறித்து முழு விசாரணை நடத்தப்படும் என்று Uefa கூறியது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்