Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

தென் கிழக்காசிய விளையாட்டுகள்: நீச்சல் போட்டிகளில் பதக்கங்களைக் குவித்தது சிங்கப்பூர்

நீச்சல் போட்டிகளில் பதக்கங்களைக் குவித்தது சிங்கப்பூர்.

வாசிப்புநேரம் -
தென் கிழக்காசிய விளையாட்டுகள்: நீச்சல் போட்டிகளில் பதக்கங்களைக் குவித்தது சிங்கப்பூர்

படம்: Matthew Mohan

நீச்சல் போட்டிகளில் பதக்கங்களைக் குவித்தது சிங்கப்பூர்.

பெண்கள் நான்குக்கு நூறு மீட்டர் எதேச்சை பாணி நீச்சலில் தங்கத்தைக் கைப்பற்றியது சிங்கப்பூர்.

அணி எடுத்துக்கொண்ட நேரம் 3 நிமிடம் 40.92 விநாடிகள். அது ஒரு தென்கிழக்காசிய விளையாட்டுகள் சாதனை.

ஆண்கள் 200 மீட்டர் எதேச்சை பாணி நீச்சலில் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக தங்கத்தைக் கைப்பற்றினார் சிங்கப்பூரின் டேரன் சுவா (Darren Chua). அவர் எடுத்துக்கொண்ட நேரம் 1 நிமிடம் 48.26 விநாடிகள்.

பெண்கள் 50 மீட்டர் வண்ணத்துப் பூச்சி பாணி நீச்சலில் சிங்கப்பூரின் குவா திங் வென் (Quah Ting Wen) தென்கிழக்காசியச் சாதனையை முறியடித்துத் தங்கம் வென்றார். அவர் எடுத்துக்கொண்ட நேரம் 26.50 விநாடிகள்.

ஆண்கள் 200 மீட்டர் நெஞ்சு நீச்சலில் சிங்கப்பூரின் மேக்சிமிலியோன் வேய் ஆங் (Maximillian Wei Ang) வெண்கலத்தை வென்றார்.

ஆண்கள் 50 மீட்டர் மல்லாந்த நீச்சலில் குவா செங் வெனுக்குச் சென்றது வெள்ளிப் பதக்கம்.

பெண்கள் 400 மீட்டர் எதேச்சை பாணி நீச்சலில் சின் ஹுவீ கான் (Chin Hwee Gan) வெள்ளிப் பதக்கம் வென்றார்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்