Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

காற்பந்து: மெஸ்ஸியின் 50ஆவது ஹாட்டிரிக்

பார்சலோனா காற்பந்துக் குழுவின் நட்சத்திர விளையாட்டு வீரர் லயனல் மெஸ்ஸி (Lionel Messi) 50ஆவது முறையாக ஹாட்டிரிக் கோல் அடித்து சாதனை புரிந்துள்ளார்.

வாசிப்புநேரம் -
காற்பந்து: மெஸ்ஸியின் 50ஆவது ஹாட்டிரிக்

(படம்:AFP/LLUIS GENE)

பார்சலோனா காற்பந்துக் குழுவின் நட்சத்திர விளையாட்டு வீரர் லயனல் மெஸ்ஸி (Lionel Messi) 50ஆவது முறையாக ஹாட்டிரிக் கோல் அடித்து சாதனை புரிந்துள்ளார்.

ஒரே ஆட்டத்தில் ஒரு விளையாட்டாளர் 3 கோல் புகுத்தினால் அது ஹாட்ரிக் எனப்படும். மூன்றையும் அடுத்தடுத்துப் புகுத்தவேண்டிய கட்டாயமில்லை.

நேற்று இரவு பார்சலோனாவும்,செவிய்யா (Sevilla) குழுவும் பொருதிய ஆட்டத்தில் மெஸ்ஸி அந்தச் சாதனையை நிகழ்த்தினார்.

ஆட்டத்தின் முதல் பாதியில் 1-2 எனப் பின்தங்கியிருந்த பார்சலோனா அணியை தமது அபார ஆட்டத்தாலும், திறமையாலும் 4 -2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெறச் செய்தார் மெஸ்ஸி .

மெஸ்ஸி இதுவரை 650 கோல்களைப் புகுத்தியுள்ளார.

அதில் 585 கோல்கள் பார்சலோனா குழுவுக்கானவை; எஞ்சிய 65 அர்ஜெண்டினா அணிக்காக மெஸ்ஸி புகுத்தியவை.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்