Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

பயிற்றுவிப்பாளராகும் எண்ணம் இல்லை - காற்பந்து நட்சத்திரம் மெஸ்ஸி

பயிற்றுவிப்பாளராகும் எண்ணம் இல்லை - காற்பந்து நட்சத்திரம் மெஸ்ஸி

வாசிப்புநேரம் -

காற்பந்து நட்சத்திரம் லயனல் மெஸ்ஸி, விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு பயிற்றுவிப்பாளராகப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

காற்பந்து அணியின் நிர்வாகப் பொறுப்புகளில் தாம் பணியாற்ற ஆர்வம் கொண்டிருப்பதாக, அவர் கூறினார்.

நேற்று, ஸ்பெயினின் La Sexta செய்திக்கு பேட்டி கொடுத்தபோது, அந்தத் தகவலை மெஸ்ஸி வெளியிட்டார்.

33 வயதாகும் மெஸ்ஸிக்கு, பார்சலோனா அணியில் இன்னும் 6 மாத காலம்தான் ஒப்பந்தம் உள்ளது.

அதன் பிறகு அவர், பார்சலோனா அணியிலேயே தொடர்வாரா அல்லது வேறு அணிக்குச் செல்வாரா என்று ரசிகர்கள் இடையே கேள்விகள் எழுந்துள்ளன.

கடந்த 20 ஆண்டுகளாக மெஸ்ஸி, பார்சலோனா அணிக்கு விளையாடியுள்ளார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்