Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

அனைத்துலகப் போட்டிகளில் விளையாட மெஸ்ஸிக்குத் தற்காலிகத் தடை

தென்னமெரிக்கக் காற்பந்து நிர்வாக அமைப்பு, அர்ஜெண்டின காற்பந்து அணித் தலைவர் லயனல் மெஸ்ஸி (Lionel Messi) மூன்று மாதங்கள் அனைத்துலகப் போட்டிகளில் விளையாடத் தடை விதித்துள்ளது. 

வாசிப்புநேரம் -
அனைத்துலகப் போட்டிகளில் விளையாட மெஸ்ஸிக்குத் தற்காலிகத் தடை

(படம்: AFP)

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

தென்னமெரிக்கக் காற்பந்து நிர்வாக அமைப்பு, அர்ஜெண்டின காற்பந்து அணித் தலைவர் லயனல் மெஸ்ஸி (Lionel Messi) மூன்று மாதங்கள் அனைத்துலகப் போட்டிகளில் விளையாடத் தடை விதித்துள்ளது.

அவருக்கு ஐம்பதாயிரம் டாலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

மெஸ்ஸி என்ன காரணத்துக்காகத் தண்டிக்கப்பட்டுள்ளார் என்பது பற்றி அமைப்பு எந்தத் தகவலையும் வெளியிடவில்லை.

ஆனால், அங்குள்ள ஊழல் குறித்து மெஸ்ஸி கருத்துச் சொன்னதால் அத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

தென்னமெரிக்கக் காற்பந்து அமைப்பு, பிரேசிலுக்கு ஆதரவாக நடந்து கொள்வதாகவும் மெஸ்ஸி குற்றஞ்சாட்டியிருந்தார்.

தடை காரணமாக அவர் சில நட்பு ஆட்டங்களில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

என்றாலும், 2022 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தகுதி ஆட்டத்தில் மெஸ்ஸி பங்கேற்க முடியும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்