Images
  • soccer
    படம்: AFP

தடுப்புக் காவலில் பிரான்ஸின் முன்னாள் காற்பந்து வீரர்

(வாசிப்பு நேரம்: 1 நிமிடம்)

உலகக் காற்பந்தின் தலைசிறந்த நட்சத்திரங்களில் ஒருவராகக் கருதப்படும் மிஷெல் பிளாட்டினி பிரான்ஸில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

2022ஆம் ஆண்டு கத்தாரில் உலகக் கிண்ணப் போட்டி நடைபெறவுள்ளது;

அந்தப் போட்டியை ஏற்றுநடத்தும் நாட்டைத் தேர்ந்தெடுக்க வாக்கெடுப்பு நடந்தது.

அதில் ஊழல் நடந்துள்ளதா என்பதை அறிய நடத்தப்படும் விசாரணையின் தொடர்பில் பிளாட்டினி தடுப்புக் காவலில் பிடித்துவைக்கப்பட்டுள்ளார்.

2007இலிருந்து 2015ஆம் ஆண்டு வரை யுயேஃபா எனும் ஐரோப்பியக் காற்பந்து ஒன்றியத்தின்தலைவராகப் பதவிவகித்தார் பிளாட்டினி.

அப்போதைய உலகக் காற்பந்துச் சம்மேளனத் தலைவரான செப் பிளாட்டர், பிளாட்டினிக்கு 1.3 மில்லியன் யூரோ தொகையை வழங்கியிருந்தார்.

அது முறைகேடானது எனத் தீர்ப்பளிக்கப்பட்டதால் பிளாட்டர், பிளாட்டினி இருவரும் காற்பந்து தொடர்பான விவகாரங்களிலிருந்து சில ஆண்டுக்குத் தடைசெய்யப்பட்டனர்.


Top