Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

காற்பந்தாட்டக்காரர் சலா பயணம் செய்த விமானத்தைத் தேடும் பணியில் அவரது குடும்பத்தினர் தீவிரம்

காற்பந்தாட்டக்காரர் எமிலியானோ சலா (Emiliano Sala) பயணம் செய்த விமானத்தைத் தேடும் பணிக்கு அவரது குடும்பத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

வாசிப்புநேரம் -

காற்பந்தாட்டக்காரர் எமிலியானோ சலா (Emiliano Sala) பயணம் செய்த விமானத்தைத் தேடும் பணிக்கு அவரது குடும்பத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

கடந்த 19ஆம் தேதி கார்டிஃப் சிட்டிக்கு விளையாட காற்பந்து ஒப்பந்தத்தை சலா செய்துகொண்டார்.

பிரான்ஸில் இருந்து கார்டிஃப் நகருக்குக் கடந்த திங்கட்கிழமை (21ஜனவரி)ஒரு சிறிய விமானத்தில் அவர் பயணம் செய்தார்.

கடற்பகுதியைக் கடந்துசென்றபோது அந்த விமானம் திடீரென காணாமல்போனது.

விமானத்திடம் இருந்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தேடல், மீட்பு பணிகள் 6 நாள்களுக்குப் பிறகு நிறுத்தப்பட்டன.

அதனைத் தொடர்ந்து, சலாவைத் தேடும் பணியில் அவரது குடுபத்தினர் இறங்கியுள்ளனர்.

மீட்பு பணிக்காக இணையம்மூலம் அவர்கள் நிதி திரட்டி வருகின்றனர்.

இதுவரை சுமார் 217,000 டாலர் வசூலிக்கப்பட்டுள்ளது.

காற்பந்து ரசிகர்கள் சலா உயிருடன் இருக்க வேண்டி பல இடங்களில் பிரார்த்தனை நடத்தி வருகின்றனர்.

சலா அர்ஜென்டினாவை சேர்ந்தவர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்