Images
  • miura
    (இளம் வயதில் மியூரா படம்: Reuters)

நிபுணத்துவக் காற்பந்தில் 51-வயது மியூரா!

ஜப்பானின் கஸுயோஷி மியூரா, தனது 51ஆவது வயதில் தொடர்ந்து நிபுணத்துவக் காற்பந்து ஆடவுள்ளார்.

ஜப்பானியக் காற்பந்தின் ஜே லீகின் இரண்டாம் தரப்பட்டியலில் இடம்பிடித்துள்ள யோக்கொஹாமா அணிக்கு ஓராண்டு விளையாட அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்தப் பருவம் முடியும்போது மியூரா 34 ஆண்டுகள் நிபுணத்துவக் காற்பந்து ஆடியிருப்பார்.

தனது அணிக்காக அடிக்கடி ஆடுவதில்லை மியூரா.

இருந்தாலும் பொதுவாகக் காற்பந்து விளையாட்டாளர்கள் சுமார் 36, 37 வயதிற்குள் ஓய்வு பெற்றுவிடுவர்.

40 வயது வரைக் களத்தில் நிலைத்திருப்பது அபூர்வம்.

ஆக அதிக வயதில் கோலடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்தவர் மியூரா.

1993ஆம் ஆண்டு ஆசியாவின் ஆகச் சிறந்த காற்பந்து வீரருக்கான விருதை வென்றார்;

80கள், 90களிலேயே பிரேசில், இத்தாலி உள்ளிட்ட நாடுகளின் அணிகளுக்காக விளையாடியவர் மியூரா!

Top