Images
  • nadal
    படம்: REUTERS 

ஆஸ்திரேலியப் பொதுவிருது: ரஃபாயல் நடால் காலிறுதி ஆட்டத்தில் வெளியேறினார்

ஆஸ்திரேலியப் பொதுவிருது டென்னிஸ் போட்டியின்
காலிறுதி ஆட்டத்தில் நட்சத்திர வீரர் ரஃபாயல் நடால் (Rafael Nadal) தோல்வியுற்றார்.

21ஆவது பொதுவிருதை அவர் வெல்வார் என்று காத்திருந்த அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

நடால், கிரீஸ் நாட்டின் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸூடன் (Stefanos Tsitsipas) இன்று காலிறுதி ஆட்டத்தில் மோதினார்.

முதல் இரண்டு செட்களை எளிதாக வென்ற நடால், கடைசி மூன்று செட்களில் சோபிக்கத் தவறினார்.

கடைசி மூன்று செட்களில் கடுமையான போட்டி கொடுத்த சிட்சிபாஸ் அரையிறுதிக்குத் தகுதிபெற்றார்.

செட் விவரம் : 3-6, 2-6, 7-6(4), 6-4 , 7-5 

Top