Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

டென்னிஸ்: பிரெஞ்சுப் பொதுவிருதுப் போட்டி - ரஃபாயல் நடால் எதிர்பாராத் தோல்வி

டென்னிஸ்: பிரெஞ்சுப் பொதுவிருதுப் போட்டி - ரஃபாயல் நடால் எதிர்பாராத் தோல்வி 

வாசிப்புநேரம் -

பிரெஞ்சுப் பொதுவிருதுப் போட்டியின் மன்னன் என்று அழைக்கப்படும் ரஃபாயல் நடால் (Rafael Nadal) அரையிறுதி ஆட்டத்தில் தோற்று போட்டியிலிருந்து வெளியேறினார்.

13 முறை பிரெஞ்சுப் பொதுவிருதை வென்ற நடால் (Rafael Nadal) உலக டென்னிஸ் தரவரிசையில் முதல் நிலையில் உள்ள நோவாக் ஜோக்கோவிச்சுடன் (Novak Djokovic) நேற்று விளையாடினார்.

முதல் செட்டை எளிதாக வென்ற நடால் அடுத்த மூன்று செட்களில் தோல்வியடைந்தார்

இறுதியில் 3-6, 6-3, 7-6, 6-2 எனும் செட் கணக்கில் ஜோக்கோவிச் வெற்றிபெற்று இறுதி ஆட்டத்திற்கு முன்னேறினார்.

50 ஆண்டுகளில் Wimbledon,
அமெரிக்கப் பொதுவிருது
பிரெஞ்சுப் பொதுவிருது
ஆஸ்திரேலியப் பொதுவிருது ஆகியவற்றை இரண்டு முறை வென்ற முதல் டென்னிஸ் விளையாட்டாளர் ஜோக்கோவிச்.

நாளை நடைபெறும் இறுதியாட்டத்தில் கிரீஸ் நாட்டின் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸை (Stefanos Tsitsipas) ஜோக்கோவிச் சந்திக்கவிருக்கிறார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்