Images
  • nadal
    படம்: AFP

டென்னிஸ்: அமெரிக்க பொதுவிருதை நடால் வென்றார்

அமெரிக்க பொதுவிருது டென்னிஸ் போட்டியில் பிரான்சின்
ரஃபாயல் நடால் (Rafael Nadal) 4 முறையாக பட்டம் வென்றுள்ளார்.

இன்று அதிகாலை தொடங்கிய ஆண்கள் ஒற்றையர் இறுதியாட்டத்தில் நடால், தர நிலையில் ஐந்தாம் இடத்திலுள்ள ரஷ்யாவின் டேனியல் மெட்வெடேவைச் (Daniil Medvedev) சந்தித்தார்.

முதல் இரண்டு செட்களை வென்ற நடால், அடுத்த இரண்டு செட்களில் தோல்வியடைந்தார்.

நடாலுக்கு இணையாகப் போராடிய மெட்வெடேவ் கடைசி செட்டில் தோல்வியடைந்தார்.

இறுதியில் 7-5, 6-3, 5-7, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் நடால் வெற்றி பெற்றார். அவர் இதுவரை 19 பொது விருதுகளை வென்றுள்ளார்.

ரோஜர் ஃபெடரர் (Roger Federer) 20 பொது விருதுகளை வென்றுள்ளார். 

Top