Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

ஒரு Twitter பதிவால் பல மில்லியன் டாலரை இழக்கும் நிலையில் அமெரிக்கக் கூடைப்பந்துச் சம்மேளனம்

அமெரிக்காவின் பிரபல கூடைப்பந்துச் சம்மேளனமான NBA ஒரு Twitter பதிவால் பல மில்லியன் டாலர் வருவாயை இழக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாசிப்புநேரம் -
ஒரு Twitter பதிவால் பல மில்லியன் டாலரை இழக்கும் நிலையில் அமெரிக்கக் கூடைப்பந்துச் சம்மேளனம்

(படம்: AFP/Stacy Revere)

அமெரிக்காவின் பிரபல கூடைப்பந்துச் சம்மேளனமான NBA ஒரு Twitter பதிவால் பல மில்லியன் டாலர் வருவாயை இழக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

NBA போட்டிகளில் பங்கேற்கும் அணிகளில் ஒன்று ஹூஸ்டன் ராக்கெட்ஸ் (Houston Rockets).

அதன் நிர்வாகி, சென்ற அக்டோபரில் ஹாங்காங் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஆதரவாக Twitter பதிவு ஒன்றை வெளியிட்டார்.

அதன் பிறகு NBA போட்டிகளுக்கான நிதிஆதரவுகளைச் சீன நிறுவனங்கள் நிறுத்திக்கொண்டன.

NBA போட்டிகளை ஒளிபரப்புவதையும் சீனா நிறுத்தியது.

சீனாவின் அந்த நடவடிக்கையால் சுமார் 400 மில்லியன் டாலர் இழப்பு ஏற்படலாம் என்று NBA தெரிவித்தது.

பல மில்லியன் கூடைப்பந்து ரசிகர்களைக் கொண்ட சீனாவில் NBA போட்டிகள் கூடிய விரைவில் மீண்டும் ஒளிபரப்பாகும் என்று NBA நம்பிக்கை தெரிவித்தது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்