Images
  • neymar (1)
    (படம்: REUTERS)

புதிய சர்ச்சையில் காற்பந்து நட்சத்திரம் நெய்மார்

காற்பந்து நட்சத்திரம் நெய்மார் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

நெய்மார் புத்தாண்டை மிகவும் விமரிசையாகக் கொண்டாடவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒரு வாரம் நீடிக்கும் கொண்டாட்டத்தில் சுமார் 500 பேர் கலந்து கொள்ளவிருப்பதாக பிரேசிலிய ஊடகங்கள் கூறுகின்றன.

COVID-19 சூழலுக்கு இடையே பெரும் கூட்டத்தை நிகழ்ச்சிக்கு அழைப்பது தேவையில்லாதது என்று கருதப்படுகிறது.

புத்தாண்டுக் கொண்டாட்டம் தொடர்பாக நெய்மார் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.

நெய்மார் தரப்பினரும் அது ஒரு "வதந்தி" என்று தெரிவித்தனர்.

நெய்மார் புத்தாண்டுக் கொண்டாட்டம் தொடர்பாகத் தங்களுக்குத் தகவல் ஏதும் கொடுக்கவில்லை என்று அவ்வட்டார அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.

உலக அளவில் நோய்த்தொற்றால் ஆக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரேசிலும் ஒன்று.

அங்கு 191,000-க்கும் மேற்பட்டோர் மாண்டனர். சுமார் 7.5 மில்லியன் பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டனர்.  

Top