Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

உலகக் கிண்ணத் தோல்விக்குப் பின் காற்பந்தைப் பார்க்கவே பிடிக்கவில்லை: நெய்மார்

பிரேஸிலின் காற்பந்து நட்சத்திரம் நெய்மார் (Neymar), இவ்வாண்டின் உலகக் கிண்ணப் போட்டிகளில் பெல்ஜியத்திடம் பிரேஸில் தோல்வியுற்றதையடுத்து, காற்பந்தைக் காணவே தமக்குப் பிடிக்கவில்லை என்று கூறியிருக்கிறார்.

வாசிப்புநேரம் -
உலகக் கிண்ணத் தோல்விக்குப் பின் காற்பந்தைப் பார்க்கவே பிடிக்கவில்லை: நெய்மார்

(படம்: AFP/Miguel Schincariol)

பிரேஸிலின் காற்பந்து நட்சத்திரம் நெய்மார் (Neymar), இவ்வாண்டின் உலகக் கிண்ணப் போட்டிகளில் பெல்ஜியத்திடம் பிரேஸில் தோல்வியுற்றதையடுத்து, காற்பந்தைக் காணவே தமக்குப் பிடிக்கவில்லை என்று கூறியிருக்கிறார்.

ரஷ்யாவில் நடைபெற்ற இவ்வாண்டின் உலகக் கிண்ணக் காற்பந்து போட்டிகளின் காலிறுதி ஆட்டத்தில், 2க்கு-1 எனும் கோல் கணக்கில் பெல்ஜியத்திடம் தோல்வியுற்றது பிரேஸில்.

அதன்பிறகு, எஞ்சிய ஆட்டங்களைக் காணும் மனநிலை தமக்கு இருக்கவில்லை என்றார் நெய்மார்.

இருப்பினும், இனி காற்பந்தாட்டங்களில் கலந்துகொள்ள மாட்டேன் என்று சொல்லும் அளவுக்குப் போகவில்லை என்பதையும் அவர் குறிப்பிட்டார்.

26 வயது நெய்மார், AFP செய்தி நிறுவனத்துக்கு நேற்று (ஜூலை 21) அளித்த நேர்காணலில் அவ்வாறு கூறினார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்