Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

பாலியல் பலாத்காரக் குற்றச்சாட்டுக்கு, காற்பந்து நட்சத்திரம் நெய்மார் மறுப்பு

பிரேஸில் காவல்துறை பதிவுசெய்த பாலியல் பலாத்காரக் குற்றச்சாட்டுகளை, காற்பந்து விளையாட்டாளர் நெய்மார் மறுத்துள்ளார். 

வாசிப்புநேரம் -
பாலியல் பலாத்காரக் குற்றச்சாட்டுக்கு, காற்பந்து நட்சத்திரம் நெய்மார் மறுப்பு

(படம்: REUTERS)

பிரேஸில் காவல்துறை பதிவுசெய்த பாலியல் பலாத்காரக் குற்றச்சாட்டுகளை, காற்பந்து விளையாட்டாளர் நெய்மார் மறுத்துள்ளார்.

அது, தம்மிடம் இருந்து பெரும் பணத்தைப் பெற மேற்கொள்ளப்பட்டிருக்கும் ஒரு மோசடி என்று அவர் குறிப்பிட்டார்.

தாம் பலாத்காரம் செய்ததாகக் குற்றம் சுமத்தும் பெண்ணின் வழக்குரைஞர் அந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக நெய்மார் சொன்னார்.

Instagram மூலமாக அறிமுகமான பிரேசில் பெண்ணை அவர், பாரிஸில் சந்திக்க அழைத்ததாகக் காவல்துறை புகாரில் குறிப்பிடப்பட்டது.

நெய்மாரின் உதவியாளர் மூலமாகத் தமக்கு விமானப் பயணச் சீட்டு அனுப்பப்பட்டு, சென்ற மாதம் 15 ஆம் தேதி பாரிஸிலுள்ள ஒரு ஹோட்டலில் தாம் தங்கியதாக, குற்றம் சுமத்திய பெண் சொன்னார்.

அன்றிரவு ஹோட்டலுக்கு வந்த நெய்மார், தம்மைப் பலாத்காரம் செய்ய முயன்றதாக அந்தப் பெண் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

அதிர்ச்சியடைந்த தாம், பாரிஸில் புகார் கொடுக்காமல் பிரேசில் திரும்பியதாக அவர் சொன்னார்.

ஆனால், நெய்மாரின் தந்தை அதை மறுத்துள்ளார். தமது மகன் நிரபராதி என்பதை நிரூபிக்கத் தேவையான ஆதாரங்களை வெளியிடத் தயாராய் இருப்பதாகவும் அவர் சொன்னார்.

பிரேசில் காற்பந்து அணியின் தலைவர் பதவி, கடந்த மாதம் நெய்மாரிடமிருந்து பறிக்கப்பட்டது.

அவர் ஒழுங்கீனமாய் நடந்துகொண்டதாக அதற்குக் காரணம் கூறப்பட்டது.

பிரான்ஸிலுள்ள ஹோட்டல் ஒன்றில் மது அருந்திவிட்டு, ஒரு பெண்ணை அவர் தாக்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்