Images
  • F1
    படம்: REUTERS

ரசிகர்கள் இல்லாமல் களையிழந்து காணப்படும் F1 கார்ப் பந்தயங்கள்

பந்தயத் திடலில் மின்னல் வேகத்தில் சீறிப்பாயும் F1 கார்களைக் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அரங்கத்தில் கூடுவது வழக்கம்.

ஆனால், இப்போது COVID-19 நோய்ப்பரவல் காரணமாக இந்தப் பருவத்தின் பெரும்பாலான F1 கார்ப் பந்தயங்கள் ரசிகர்கள் இன்றி நடந்து வருகின்றன.

F1 கார்ப் பந்தயப் பருவத்தில் பிரிட்டன் பந்தயம் சற்று விறுவிறுப்பானது.

ஆனால், இன்று பிரிட்டனில் நடக்கும் பந்தயத்தில் பாதுகாப்புக் காரணங்களால் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை.

அது பந்தய ஏற்பாட்டாளர்கள், ரசிகர்கள், ஓட்டுநர்கள் என அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஒரே ரசனை கொண்ட பல்லாயிரம் பேரின் உற்சாக முழக்கத்துக்கு இடையே பந்தயக் கார்களை ஓட்டிப் பழகிய ஓட்டுநர்களுக்கு இது ஒரு மிகப் பெரிய ஏமாற்றம்.

இருப்பினும், அடுத்த ஆண்டு பந்தயத்தைக் காண முழு அரங்கமும் ரசிகர்கள் வெள்ளத்தில் மூழ்கும் என்று பந்தய ஏற்பாட்டாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

இன்று நடக்கும் பந்தயத்தில் உலக வெற்றியாளர் லூயிஸ் ஹாமில்டன் (Lewis Hamilton) வெற்றிபெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

Top