Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

பனிக்கட்டியில் பந்தயம் - மெச்சத்தக்க சாதனை முயற்சியில் ஈடுபட்ட சிங்கப்பூரர்

இடக் காலை இழந்தாலும் மன உறுதியை இழக்கவில்லை இவர்.

வாசிப்புநேரம் -
பனிக்கட்டியில் பந்தயம் - மெச்சத்தக்க சாதனை முயற்சியில் ஈடுபட்ட சிங்கப்பூரர்

(படம்: North Pole Marathon)

இடக் காலை இழந்தாலும் மன உறுதியுடன் நெடுந்தொலைவோட்டப் போட்டிகளில் பங்கேற்கிறார் 49 வயது ஷரீஃப் அப்துல்லா.

இதுவரை 25க்கு மேற்பட்ட நெடுந்தொலைவு ஓட்டப்பந்தயங்களில் பங்கேற்ற அவர், அண்மையில் உறைந்துபோன ஆர்க்டிக் பெருங்கடல் மீது நடந்த ஓட்டப்பந்தயம் ஒன்றில் பங்கேற்றார்.

பந்தயத்தில் பங்கேற்பவர்கள் ஓடவேண்டிய தூரம் 42.195 கிலோமீட்டர்.

ஆனால், கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த பந்தயத்தில் அவர் பாதித் தொலைவு மட்டுமே ஓடினார்.

பந்தயம் தொடங்கிய சில மணி நேரத்தில் அவரைப் பாதியோடு நிறுத்திக்கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் வேண்டிக்கொண்டனர்.

பனியில் கால் புதைவதால், இயல்பான வேகத்தில் அவரால் பந்தயத்தில் பங்கேற்க முடியாததே அதற்குக் காரணம்.

அதிக நேரம் இருந்தால் பந்தயத்தை முழுமையாக முடித்திருக்கலாம் என்று கூறிய ஷரீஃப், அதற்கு 12 மணி நேரத்திற்கு மேல் ஆகியிருக்கும் என்றார்.

தாம் பந்தயத்தை முடிக்கும் வரை மற்ற போட்டியாளர்களும் ஏற்பாட்டாளர்களும் கடுங்குளிரில் காத்திருக்கவேண்டும் என்பதால், ஏற்பட்டாளர்களின் கோரிக்கையை ஏற்று பாதியிலேயே போட்டியை முடித்துக் கொண்டதாகச் சொன்னார் அவர்.

தாம் பந்தயத்தை முடிக்காவிட்டாலும் வெற்றியடைந்ததுபோல் உணர்வதாக ஷரீஃப் கூறினார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்