Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் நோவாக் ஜோக்கோவிச்சுக்கு வெற்றி

உலக டென்னிஸ் வீரர் நோவாக் ஜோக்கோவிச் (Novak Djokovic), தம் நீண்ட கால வைரியான ரோஜர் ஃபெடரரை (Roger Federer) ஆண்கள் விம்பிள்டன் இறுதிப் போட்டியில் வென்றுள்ளார்.

வாசிப்புநேரம் -
விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் நோவாக் ஜோக்கோவிச்சுக்கு வெற்றி

(படம்: AFP/ANDY RAIN)

உலக டென்னிஸ் வீரர் நோவாக் ஜோக்கோவிச் (Novak Djokovic), தம் நீண்ட கால வைரியான ரோஜர் ஃபெடரரை (Roger Federer) ஆண்கள் விம்பிள்டன் இறுதிப் போட்டியில் வென்றுள்ளார்.

கிட்டத்தட்ட ஐந்து மணிநேரம் நீடித்த போட்டியில் ஏழுக்கு ஆறு, ஒன்றுக்கு ஆறு, ஏழுக்கு ஆறு, நான்குக்கு ஆறு, 13க்கு 12 எனும் ஆட்டக்கணக்கில் ஜோக்கோவிச் வென்றார்.

கடுமையாகப் போராடிய ஃபெடரர் தமக்குக் கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி வெற்றிபெறத்தவறினார்.

வெற்றி தோல்வியை நிர்ணயிக்க போட்டி 'tiebreaker' வரை சென்றது. மேலும் அனைத்து இங்கிலாந்துச் சங்கப் போட்டி ஒன்றின் முடிவை நிர்ணயிக்க 'tiebreaker' வரை சென்றது இதுவே முதல் முறை.

ஐந்தாவது செட்டில் இருவரும் 12க்கு 12என சமிநிலை அடையவே 'tiebreaker' மூலம் போட்டியின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் புதிய விதிமுறை அறிமுகமானது.

ஃபெடரர் கடுமையான போட்டியாளர் என்பதை ஜோக்கோவிச் ஒப்புக்கொண்டார்.

விம்பிள்டன் வரலாற்றில் நீண்ட நேரம் நடைபெற்ற போட்டியாகவும் இவ்வாண்டின் ஆண்கள் விம்பிள்டன் இறுதி டென்னிஸ் போட்டி அமைந்தது.
 
விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்