Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

ஒலிம்பிக் சுவாரஸ்யங்கள்: 4 முறை தங்கம் பெற்ற சோவியத் ஒன்றியத்தை அசர வைத்த அமெரிக்கக் கல்லூரி மாணவர்கள்

தோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் விரைவில் தொடங்கவிருக்கின்றன. அதையொட்டி, ஒலிம்பிக் விளையாட்டுகளில் இதுவரை நடந்த சில சுவாரஸ்யமான தகவல்கள் 'செய்தி' ரசிகர்களுக்காக...

வாசிப்புநேரம் -
ஒலிம்பிக் சுவாரஸ்யங்கள்: 4 முறை தங்கம் பெற்ற சோவியத் ஒன்றியத்தை அசர வைத்த அமெரிக்கக் கல்லூரி மாணவர்கள்

(படம்: AP)

தோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் விரைவில் தொடங்கவிருக்கின்றன. அதையொட்டி, ஒலிம்பிக் விளையாட்டுகளில் இதுவரை நடந்த சில சுவாரஸ்யமான தகவல்கள் 'செய்தி' ரசிகர்களுக்காக...

1980- ரஷ்யாவில் நடந்த ஒலிம்பிக் ஹாக்கி போட்டி!

ஒரு பக்கம், கடந்த 4 ஒலிம்பிக் ஹாக்கி போட்டிகளிலும் தங்கம் வென்ற சோவியத் ஒன்றியம்.

இன்னொரு பக்கம், அதிக அனுபவம் இல்லாத, கல்லூரி மாணவர்கள் கொண்ட அமெரிக்க ஹாக்கி குழு.

அரை இறுதிச் சுற்றில் 3க்கு 4 என்ற கோல் கணக்கில் வென்று பார்ப்போரை அசத்தியது அமெரிக்கா.

'Miracle on Ice', அதாவது பனிக்கட்டியில் அதிசயம் என அந்தப் போட்டி பெயரிடப்பட்டது.

அதில் அமெரிக்கா வெல்லும் என்ற யாரும் எதிர்பார்க்கவே இல்லை.

ஆனால், மனம் தளரவில்லை இளம் அமெரிக்கக் குழு.

இறுதிச் சுற்றில், ஃபின்லந்தையும் வென்று தங்கப் பதக்கத்தைத் தட்டிச் சென்றது. 

சிங்கப்பூரின் ஒலிம்பிக் கட்டமைப்பாக மீடியாகார்ப், தோக்கியோ 2020 போட்டிகளை மிக விரிவாக உங்களுக்கு வழங்கவிருக்கிறது. மேல்விவரங்களுக்கு mediacorp.sg/tokyo2020 என்ற இணையத்தளத்தை நாடவும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்