Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

ஒலிம்பிக் சுவாரஸ்யங்கள்: தங்கப் பதக்கத்தை ஆற்றில் வீசிய வீரர்

ஒலிம்பிக் சுவாரஸ்யங்கள்: தங்கப் பதக்கத்தை ஆற்றில் வீசிய வீரர்

வாசிப்புநேரம் -
ஒலிம்பிக் சுவாரஸ்யங்கள்: தங்கப் பதக்கத்தை ஆற்றில் வீசிய வீரர்

(கோப்புப் படம்: Reuters/Andreas Meier)

தோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் விரைவில் தொடங்கவிருக்கின்றன. அதையொட்டி, ஒலிம்பிக் விளையாட்டுகளில் இதுவரை நடந்த சில சுவாரஸ்யமான தகவல்கள் 'செய்தி' ரசிகர்களுக்காக...

ஒலிம்பிக் போட்டிகளில் தாம் வென்ற தங்கப் பதக்கத்தை ஆற்றில் வீசிவிட்டார் அப்போது கஸ்ஸியஸ் கிளே (Cassius Clay) என்று அழைக்கப்பட்ட முகமது அலி (Muhammad Ali).

1960ஆம் ஆண்டு ரோம் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் குத்துச் சண்டைப் போட்டியில் அலி தங்கம் வென்றார்.

ஆனால், அமெரிக்காவிற்குத் திரும்பிய பின், அந்தப் பதக்கத்தை அவர் ஒஹாயோ (Ohio) ஆற்றில் வீசிவிட்டார்.

காரணம்? இன ரீதியான பாகுபாடு என்றார்.

வெள்ளை இனத்தவர்களுக்கு மட்டுமான உணவகத்தில் தமக்கும் தம் நண்பருக்கும் சேவை மறுக்கப்பட்டதாக அலி குறிப்பிட்டார்.

கோபம் தணிந்த அலி, பின் 1996இல் அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் தொடக்க விழாவில், ஒலிம்பிக் சுடரை ஏற்றிவைத்தார். 

சிங்கப்பூரின் ஒலிம்பிக் கட்டமைப்பாக மீடியாகார்ப், தோக்கியோ 2020 போட்டிகளை மிக விரிவாக உங்களுக்கு வழங்கவிருக்கிறது. மேல்விவரங்களுக்கு mediacorp.sg/tokyo2020 என்ற இணையத்தளத்தை நாடவும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்