Images
  • schooling
    (படம்:Nuria ling/Facebook)

ஒலிம்பிக் போட்டிகளுக்குப் பயிற்சி பெற சிங்கப்பூர் திரும்பவிருக்கும் நீச்சல் வீரர் ஸ்கூலிங்

2020ஆம் ஆண்டு தோக்கியோவில் நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கவிருக்கும் உள்ளூர் நீச்சல் வீரர் ஜோசஃப் ஸ்கூலிங் பயிற்சிபெற அடுத்த ஆண்டு சிங்கப்பூர் திரும்பவிருக்கிறார்.

தற்போது அமெரிக்காவின் ஆஸ்டின் நகரின் டெக்ஸஸ் பல்கலைக்கழகத்தில் படிப்பை மேற்கொள்ளும் ஸ்கூலிங் நீச்சல் செய்தி அமைப்பான SwimSwamஇற்குக் காணொளிவழி பேட்டி அளித்திருந்தார்.

படிப்புக்குப் பிறகு சிங்கப்பூருக்குப் பயிற்சி பெற வருவதை எண்ணி உற்சாகமாய் இருப்பதாக அவர் சொன்னார். அடுத்த ஆண்டு ஜனவரிக்கும் பிப்ரவரிக்கும் இடையே அவர் நாடு திரும்பவிருப்பதாகக் கூறினார்.

தம்மை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசெல்ல என்ன தேவை என்பதை அவரின் சிங்கப்பூர்ப் பயிற்றுவிப்பாளர்கள் அறிந்துவைத்துள்ளதாகச் சொன்னார் ஸ்கூலுங்.
 

Top