Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

ஒலிம்பிக் போட்டிகளை ரசிகர்கள் இல்லாமல் நடத்துவதை விரும்பவில்லை: தோக்கியோ 2020 குழுத் தலைவர்

ஒலிம்பிக் போட்டிகளை ரசிகர்கள் இல்லாமல் நடத்துவதைத் தாம் விரும்பவில்லை என்று தோக்கியோ 2020 குழுத் தலைவர் யோஷிரோ மோரி (Yoshiro Mori) தெரிவித்துள்ளார்.

வாசிப்புநேரம் -
ஒலிம்பிக் போட்டிகளை ரசிகர்கள் இல்லாமல் நடத்துவதை விரும்பவில்லை: தோக்கியோ 2020 குழுத் தலைவர்

(படம்: AFP/Philip FONG)

ஒலிம்பிக் போட்டிகளை ரசிகர்கள் இல்லாமல் நடத்துவதைத் தாம் விரும்பவில்லை என்று தோக்கியோ 2020 குழுத் தலைவர் யோஷிரோ மோரி (Yoshiro Mori) தெரிவித்துள்ளார்.

அதனையொட்டி Kyodo News செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

COVID-19 சூழலைக் கருத்தில் கொண்டு, போட்டிகளின்போது ரசிகர்களின் எண்ணிக்கையைக் குறைக்கலாம் என்று அனைத்துலக ஒலிம்பிக் மன்றத் தலைவர் தாமஸ் பாக் (Thomas Bach) கடந்த வாரம் கூறியிருந்தார்.

இருப்பினும், ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தக்கூடாது என்றும் விளையாட்டு நிகழ்ச்சிகள் என்று வரும்போது முழு நாடே உணர்ச்சிகரமாக இருக்கும் என்றும் திரு. மோரி கூறியுள்ளார்.

ரசிகர்கள் இல்லாத அரங்கங்களில் போட்டிகளை நடத்த விரும்பவில்லை என்றும் அவர் சொன்னார்.

COVID-19 நோய்த்தொற்று காரணமாக, ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த ஆண்டு வரை ஒத்திவைக்கப்பட்டன.

ஏற்பாட்டாளர்கள் தற்போது ஜப்பானிய அரசாங்கத்துடன் போட்டிகள் குறித்துக் கலந்துரையாடி வருகின்றனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்