Images
  • y2
    படம்: REUTERS

வெற்றிக் கதைகள்: அகதியாகக் கடலில் தத்தளித்து, உலகம் போற்றும் நீச்சல் வீரரான யுஸ்ரா

தோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் இன்னும் சில வாரங்களில் தொடங்கவுள்ளன.

COVID-19 நோய்ப்பரவலால் துவண்டு போகாமல் இருக்க சில விளையாட்டு நட்சத்திரங்களின் வெற்றிக் கதைகளை ஒலிம்பிக்ஸ் குழு, தனது இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் பதிவு செய்து வருகிறது.

"செய்தி" ரசிகர்களுக்காக அவை, தமிழில்....


நீச்சல் வீராங்கனை யுஸ்ரா மார்டினி (Yusra Mardini)

  • சிரியாவில் 1998 ஆம் ஆண்டு பிறந்தார்.
  • சிறு வயதிலிருந்தே யுஸ்ரா நீச்சலில் நாட்டம் கொண்டிருந்தார்.
  • உள்நாட்டுப் போரால் வீட்டை இழந்தார்.
  • 2015ஆம் ஆண்டு அவரும் அவரது சகோதரியும் சிரியாவைவிட்டு வெளியேற முடிவெடுத்தனர்.
  • ஐரோப்பாவில் அகதியாக தஞ்சம் புகுவது அவர்கள் எண்ணம்.
  • லெபனான் வழி துருக்கி சென்று அங்கிருந்து கடல் வழி கீரிஸ் செல்லுவது திட்டம்.


(படம்: REUTERS)

  • கீரிஸ் செல்லுவதற்கான சிறு படகில் கூட்டம் அலைமோதியது.
  • கடலில் சென்றுகொண்டிருந்த போது படகின் இயந்திரம் கோளாறானது.
  • படகு மூழ்கிவிடாமல் இருக்க, யுஸ்ராவும் அவரது சகோதரியும் கடலில் குதித்து நீந்திக்கொண்டே படகைத் தள்ளினர், அவர்களுக்கு மேலும் இருவர் உதவினர்.
  • மூன்றறை மணி நேரத்துக்குப் பின் படகு செயல்படத் தொடங்கியது.... கீரிஸ் சென்றார் யுஸ்ரா.
  • பின் ஜெர்மனியில் தஞ்சம் புகுந்து, நீச்சல் போட்டியில் பங்கேற்றார்.


(படம்: REUTERS)

  • ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வது ஒரே கனவு.
  • கனவு நனவானது... 2016 ரியோ ஒலிம்பிக் போட்டியில் அகதிகள் அணிகள் சார்பாக யுஸ்ரா போட்டியிட்டார்.
  • 2017 ஆம் ஆண்டு ஐக்கிய நாட்டு அமைப்பில் தூதராக இணைந்த அவர், பலருக்கு ஊக்கம் தந்து வருகிறார்.
  • இப்போது 2020 தோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் அகதிகள் அணிகள் சார்பாக யுஸ்ரா போட்டியிடவுள்ளார்.


(படம்: REUTERS)

சிங்கப்பூரின் ஒலிம்பிக் கட்டமைப்பாக மீடியாகார்ப், தோக்கியோ 2020 போட்டிகளை மிக விரிவாக உங்களுக்கு வழங்கவிருக்கிறது.
மேல்விவரங்களுக்கு mediacorp.sg/tokyo2020 என்ற இணையத்தளத்தை நாடவும்.  

Top