Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

வெற்றிக் கதைகள்: உடைந்தது கால் தான் நம்பிக்கை இல்லை- ஒலிம்பிக்கில் சாதிக்கக் காத்திருக்கும் சமீர்

வெற்றிக் கதைகள்: உடைந்தது கால் தான் நம்பிக்கை இல்லை- ஒலிம்பிக்கில் சாதிக்கக் காத்திருக்கும் சமீர்

வாசிப்புநேரம் -

தோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் இன்னும் சில நாள்களில் தொடங்கவுள்ளன.

COVID-19 நோய்ப்பரவலால் துவண்டு போகாமல் இருக்க சில விளையாட்டு நட்சத்திரங்களின் வெற்றிக் கதைகளை வெளியிட்டு வருகிறது Olympics இன்ஸ்டாகிராம் பக்கம்.

"செய்தி" ரசிகர்களுக்காக அவை தமிழில்...

சமீர் ஏய்ட் சாய்ட் (Samir Aït Saïd)

விளையாட்டு: சீருடற்பயிற்சி

நாடு: பிரான்ஸ்

வயது : 31

  • கடின உழைப்பு கண் முன் தகர்ந்து போனால் உடைந்து விடக்கூடாது என்பதற்குச் சான்று சமீர் ஏய்ட் சாய்ட்.
  • 2016 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்ற சமீர், பதக்கம் நிச்சயம் என்று உறுதியாகப் போட்டியில் இறங்கினார்.
  • 2013, 2014, 2015ஆம் ஆண்டுகளில் பல வெற்றிகளைப் பெற்ற சமீருக்கு நிச்சயம் பதக்கம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

(படம்: REUTERS)

படம்: REUTERS

  • ஆனால் எதிர்பாரா விதமாக சமீர் போட்டியின் போது தமது காலை உடைத்துக்கொண்டார்.
  • சமீரின் கால்களுடன் சேர்த்து அவரின் பதக்கக் கனவும் கண் முன் உடைந்தது. போட்டியில் இருந்து விலகினார்.
  • போட்டியை விளையாட்டரங்கில் பார்த்த அனைவருக்கும் இருந்த கேள்வி இனி சமீரால் நடக்க முடியுமா ?

(படம்: REUTERS)

படம்: REUTERS

  • ஆனால் சமீர் மனம் தளரவில்லை.
  • மருத்துவமனையிலேயே தோக்கியோ 2020-இல் சாதிப்பதுதான் லட்சியம் என்று முடிவெடுத்தார்.
  • நடக்கத் தொடங்கியதும் பயிற்சியைத் தொடங்கினார்.
  • கால் உடைந்திருந்த போது சமீருக்குத் துணையாக இருந்த தந்தை சில நாள்களில் இறந்தார்.
படம்: AFP

(படம்: AFP)

  • அது சமீரை அதிகம் பாதித்தது. இருப்பினும் தமது தந்தைக்கு கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டும் என்று முடிவெடுத்தார்.
  • 2019ஆம் ஆண்டு நடந்த உலக சீருடற்பயிற்சி வெற்றியாளர் கிண்ணப் போட்டியில் மூன்றாவதாக வந்தார்.
  • அது அவரை தோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெறச் செய்தது.
  • இழந்த வாய்ப்பை தங்கப்பதக்கமாக மாற்றக் காத்திருக்கிறார் சமீர். அவரை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது விளையாட்டு உலகம்.
படம்: AFP

(படம்: AFP)
சிங்கப்பூரின் ஒலிம்பிக் கட்டமைப்பாக மீடியாகார்ப், தோக்கியோ 2020 போட்டிகளை மிக விரிவாக உங்களுக்கு வழங்கவிருக்கிறது.
மேல்விவரங்களுக்கு mediacorp.sg/tokyo2020 என்ற இணையத்தளத்தை நாடவும்.
  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்