Images
  • Tokyo
    படம்: AP Images

விநோதமான ஒலிம்பிக் விதிமுறைகள்- உங்களுக்குத் தெரியுமா?

நீங்கள் விளையாட்டுப் பிரியரா?

அப்படியானால், உங்களுக்கு ஒலிம்பிக் விளையாட்டுகளின் விதிமுறைகள் அத்துபடியாக இருக்கலாம்.

ஆனால் விநோதமான இத்தகைய விதிமுறைகளும் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா?

--முக்குளிப்பின் (Diving) போது போட்டியாளர்கள் தன்னம்பிக்கை குறைந்து காணப்பட்டால் நீதிபதிகள் மதிப்பெண்களை குறைக்கலாம் என்பது உங்களுக்கு தெரியுமா ?

--நீர்ப்பந்து விளையாட்டின் (Water Polo) போது போட்டியாளர்களின் உடலில் எந்தவிதக் களிம்போ எண்ணெய்ப் பொருளோ இருக்கக்கூடாது என்று ஒரு விதிமுறை உள்ளது எனபது உங்களுக்குத் தெரியுமா?


--அம்பெய்தலின்போது போட்டியாளர்களுக்கு குறி பார்த்து அம்புவிட வெறும் 40 விநாடிகள் தான் தரப்படுகிறது. மேலும் அவர்கள் குறி பார்த்துச் சுடும் ஒவ்வொரு அம்பிலும் அவர்களின் பெயர் பதித்து இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா ?

--ரிதெமிக் ஜிம்னாஸ்டிக்ஸ் (Rhythemic Gymnastics) எனப்படும் சீருடற்பயிற்சியில் போட்டியாளர்களின் வளையங்களோ, ரிப்பன்களோ, பந்துகளோ தூக்கி வீசும்போது மேற்கூரையில் அல்லது ஏதாவது இடைவெளிகளில் சிக்கிக்கொள்ளலாம். அப்படி நடந்தால், முதலில் இருந்து திரும்பப் படைக்க அனுமதி இல்லை. அந்தப் பொருள்கள் இருப்பது போல் பாவனை செய்துகொண்டு அவர்கள் தொடரவேண்டும் என்பது உங்களுக்குத் தெரியுமா?


-வாள் சண்டையின் போது போட்டியாளர்கள் அரங்கத்தை விட்டு வெளியேறினால், அவர்கள் தோல்வியை ஒப்புக்கொண்டுவிட்டார்கள் என்று அர்த்தமாகும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

--கோல்ஃப் (Golf) விளையாட்டின்போது போட்டியாளர்கள் புள்ளிகள் குறிக்கும் பலகையில் கையெழுத்திடவில்லை என்றால், உடனடியாக போட்டியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?


--மல்யுத்தத்தின் போது வீரர்கள், கைக்குட்டை ஒன்றை வைத்துக்கொள்ளவேண்டும் என்பது விதிமுறை. ரத்தக் கசிவைத் துடைக்கவும், தரையில் ரத்தம் சிந்தினால் அதைச் சுத்தம் செய்யவும் அவர்கள் அதைப் பயன்படுத்தவேண்டும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

-குத்துச் சண்டை வீரர்கள், தாடி, மீசை போன்ற எந்த வித 'முக முடியையும்' கொண்டிருக்கக் கூடாது என்பது உங்களுக்கு தெரியுமா ?


ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கிவிட்டன. இனி என்ன? இந்த விதிமுறைகளைக் கூர்ந்து கவனித்து, 'அட ஆமாம்!' என்று சொல்லுங்கள்!

தோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளை நேரடியாக meWATCH தளத்தின் 14 பிரத்தியேக ஒளிவழிகளில் காணலாம். meWATCH.sg/tokyo2020 என்ற இணையப்பக்கத்தை நாடுங்கள்;
சிங்கப்பூரின் ஒலிம்பிக் கட்டமைப்பான மீடியாகார்ப்புடன் இணைந்திருங்கள்!

 

Top