Images
  • usa
    படம்: REUTERS 

தோக்கியோ 2020: இன்று கவனத்தை ஈர்த்த சில போட்டிகள்...இதோ...

தோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டுகளின் 15ஆவது நாள்...

கவனத்தை ஈர்த்த சில போட்டிகள் இதோ...

-- திடல்தடப் போட்டிகளில் முதன்முறையாக ஒலிம்பிக்கில், இந்தியா தங்கப் பதக்கம் வென்றுள்ளது.

ஈட்டி எறியும் போட்டியில், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா அந்தச் சாதனையை நிகழ்த்தினார்.

ஈட்டி எறியும் பிரிவில், இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்ற முதல் இந்திய விளையாட்டாளர் அவர்தான்.

அவர் ஈட்டியை எறிந்த தூரம் 87 புள்ளி 58 மீட்டர்.

செக் குடியரசைச் சேர்ந்த இருவர், வெள்ளியும் வெண்கலமும் வென்றனர்.

-- மகளிர் கோல்ஃப் போட்டியில் அமெரிக்காவின் நெல்லி கோர்டா-வுக்குத்(Nelly Korda) தங்கம்.

உலகத் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் கோர்டா (Korda) ஒரு வீச்சு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

ஜப்பானின் மோன் இனாமிக்கு (Mone Inami) வெள்ளி.

நியூஸிலந்தின் லிடியா கோவுக்கு (Lydia Ko) வெண்கலம்.

-- ஆண்கள் கூடைப்பந்துப் போட்டியிலும் அமெரிக்காவுக்குத் தங்கம்.

இறுதியாட்டத்தில் அது பிரான்ஸை வீழ்த்தியது.

ஆட்டத்தின் தொடக்கம் பிரான்ஸுக்குச் சாதகமாக இருந்த போதும் இறுதியில் 87-82 என்ற புள்ளிக்கணக்கில் அமெரிக்கா வெற்றி வாகை சூடியது.

-- குத்துச்சண்டைப் போட்டியில் பிரிட்டனுக்குத் தங்கம்.

தோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டுகளின் குத்துச்சண்டைப் போட்டியில் பிரிட்டன் வென்றிருக்கும் முதல் தங்கம் இது.

பிலிப்பீன்ஸின் கார்லோ பாலமுடன் (Carlo Paalam) மோதினார் பிரிட்டனின் கலால் யஃபாய் (Galal Yafai).

4-1 என்ற புள்ளிக்கணக்கில் வென்றார் 24 வயது யஃபாய்

-- ஆண்கள் கடற்கரை வாலிபால்
களம் இறங்கின நார்வேயும் ரஷ்ய ஒலிம்பிக் குழுவும்.

நார்வே இணை ஆரம்பத்தில் சற்று மந்தமாக ஆடிய போதும் போகப் போக விறுவிறுப்பைக் கூட்டியது.

2-0 என்ற எண்ணிக்கையில் வென்று தங்கத்தைத் தனதாக்கிக் கொண்டது நார்வே.

-- மகளிர் நெடுந்தொலைவு ஓட்டப்பந்தயத்தில் தங்கத்தை வென்றார், கென்யாவின் பெரேஸ் ஜெப்சர்சர் (Peres Jep-chir-chir).

அவர் எடுத்துக் கொண்ட நேரம் 2 மணி 27 நிமிடம் 20 விநாடிகள்.

16 விநாடிகள் பின்னால் வந்து வெள்ளியை வென்றார், சக நாட்டவரான ப்ரிகிட் கோஸ்கேய் (Brigid Kosgei)

அமெரிக்காவின் மோலி செய்டலுக்கு (Molly Seidel) வெண்கலம். 

தோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளை நேரடியாக meWATCH தளத்தின் 14 பிரத்தியேக ஒளிவழிகளில் காணலாம்.meWATCH.sg/tokyo2020 என்ற இணையப்பக்கத்தை நாடுங்கள்.

சிங்கப்பூரின் ஒலிம்பிக் கட்டமைப்பான மீடியாகார்ப்புடன் இணைந்திருங்கள்!.

Top