Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

தோக்கியோ 2020 ஒலிம்பிக் மேசைப் பந்து: சிங்கப்பூரின் யூ மெங்யூ அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்

தோக்கியோ 2020 ஒலிம்பிக் மகளிர் மேசைப்பந்து ஒற்றையர் பிரிவில், சிங்கப்பூரின் யூ மெங்யூ (Yu Mengyu) அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

வாசிப்புநேரம் -

தோக்கியோ 2020 ஒலிம்பிக் மகளிர் மேசைப்பந்து ஒற்றையர் பிரிவில், சிங்கப்பூரின் யூ மெங்யூ (Yu Mengyu) அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

அவர், போர்ச்சுகலின் (Portugal) ஷாவ் ஜியேனியை (Shao Jieni) வென்றார்.

உலகத் தரவரிசையில் 63-ஆம் இடத்தில் உள்ள ஜியேனியை, யூ, 4க்குப் பூஜ்யம் என்ற ஆட்டக் கணக்கில் வென்றார்.

யூ, அடுத்த சுற்றில் சீன தைப்பேயின் செங் ஐ-சிங்கைச் (Cheng I-Ching) சந்திப்பார்.

செங், உலகத் தரவரிசையில் 8ஆம் இடத்திலும் யூ, 47ஆம் இடத்திலும் உள்ளனர்.

இதற்கிடையில், ஆண்கள் மேசைப்பந்து ஒற்றையர் பிரிவின் இரண்டாம் சுற்றில் சிங்கப்பூரின் கிலேரன்ஸ் சியூ (Clarence Chew) ஆஸ்திரியாவின் டேனியல் ஹபேசோனிடம் (Daniel Habesohn) தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார்.

ஆட்ட விவரம் 1க்கு 4. 

தோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளை நேரடியாக meWATCH தளத்தின் 14 பிரத்தியேக ஒளிவழிகளில் காணலாம்.

meWATCH.sg/tokyo2020 என்ற இணையப்பக்கத்தை நாடுங்கள்; சிங்கப்பூரின் ஒலிம்பிக் கட்டமைப்பான மீடியாகார்ப்புடன் இணைந்திருங்கள்! 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்