Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

ஜப்பான்: ஒலிம்பிக் போட்டிகளின்போது நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்த சுமார் 930 மில்லியன் டாலர் செலவிடப்படும்

ஜப்பான், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளின்போது, COVID-19 நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்குச் சுமார் 930 மில்லியன் டாலரைச் செலவிடவுள்ளது.

வாசிப்புநேரம் -
ஜப்பான்: ஒலிம்பிக் போட்டிகளின்போது நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்த சுமார் 930 மில்லியன் டாலர் செலவிடப்படும்

(படம்: REUTERS/Dado Ruvic/Illustration)

ஜப்பான், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளின்போது, COVID-19 நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்குச் சுமார் 930 மில்லியன் டாலரைச் செலவிடவுள்ளது.

பரிசோதனைக் கூடங்கள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை அமைக்க, தோக்கியோ திட்டமிடுகிறது.

விளையாட்டாளர்கள் தங்கும் விடுதியில், தொற்றுநோய்க் கட்டுப்பாட்டு நிலையம் ஒன்றும் அமைக்கப்படும்.

அதற்கான கூடுதல் செலவை, விளம்பர ஆதரவு மூலமாகவும் காப்புறுதி மூலமாகவும் ஈடுகட்டப்போவதாக, ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.

எதிர்பாராச் செலவுகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியையும் பயன்படுத்த அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

ஒத்திவைக்கப்பட்டுள்ள ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்குக் குறைந்தது 15.9 பில்லியன் டாலர் தேவைப்படும்.

அது, கடந்த ஆண்டு பரிந்துரைக்கப்பட்ட மொத்தச் செலவைக் காட்டிலும் 22 விழுக்காடு அதிகம்.

எதிர்வரும் ஜூலை மாதம் 23ஆம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

அதையடுத்து, ஆகஸ்ட் 24ஆம் தேதி உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கும்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்