Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

வெயிலில் இருந்து தப்பிக்க ஒலிம்பிக் நெடுந்தொலைவோட்டம் காலை 6 மணிக்கே தொடங்கும்

தோக்கியோவில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் விளையாட்டுகளின் நெடுந்தொலைவோட்டப் போட்டிகள், உள்ளூர் நேரப்படி காலை 6 மணிக்கே தொடங்கும் என்பதை ஏற்பாட்டாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கின்றனர்.  

வாசிப்புநேரம் -

தோக்கியோவில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் விளையாட்டுகளின் நெடுந்தொலைவோட்டப் போட்டிகள், உள்ளூர் நேரப்படி காலை 6 மணிக்கே தொடங்கும் என்பதை ஏற்பாட்டாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கின்றனர்.

அந்நகரின் கோடைக்கால வெப்பத்தில் வழக்கம்போல் முற்பகலில் போட்டியைத் தொடங்குவது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய மருத்துவ நெருக்கடிகளுக்கு இட்டுச்செல்லக்கூடும் என்று மருத்துவர்கள் எச்சரித்திருந்தனர்.

ஆண்கள் 50 கிலோமீட்டர் நடைப்போட்டி அதைவிட முன்னதாக, காலை ஐந்தரை மணிக்கே தொடங்கும்.

மருத்துவ ஆலோசனையைக் கருத்தில் கொண்டு போட்டிகளுக்கான நேரங்களை வகுத்திருப்பதாக ஏற்பாட்டாளர்கள் கூறினர்.

7 பேர் கொண்ட ரக்பி விளையாட்டு, மூவகைப் போட்டி, மலை சைக்கிள் போட்டி ஆகியவற்றுக்கான கால அட்டவணையும் அதிகச் சூடான வெப்பநிலையைத் தவிர்க்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

கடந்த கோடைக்காலத்தில் ஜப்பானில் அனல்காற்று வீசியது.

அதன் காரணமாக ஒலிம்பிக் ஆண், பெண் நெடுந்தொலைவோட்டங்கள் இரண்டையும் காலை ஐந்தரை மணிக்கும் 6 மணிக்கும் இடையே தொடங்கப் போவதாக ஏற்பாட்டாளர்கள் ஏற்கனவே அறிவித்திருந்தனர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்