Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

ஒலிம்பிக் விளையாட்டுகளில் சிங்கப்பூர் விளையாட்டாளர்கள் இன்று

ஒலிம்பிக் விளையாட்டுகளில் சிங்கப்பூர் விளையாட்டாளர்கள் இன்று...

வாசிப்புநேரம் -
ஒலிம்பிக் விளையாட்டுகளில் சிங்கப்பூர் விளையாட்டாளர்கள் இன்று

(படம்: Kong Chong Yew/SNOC)

ஒலிம்பிக் விளையாட்டுகளில் சிங்கப்பூர் விளையாட்டாளர்கள் இன்று...

சிங்கப்பூரின் மேசைப் பந்தாட்டக்காரர், கிலேரன்ஸ் சியூ (Clarence Chew), ஒலிம்பிக் விளையாட்டுகளின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

அடெல் டான்(Adele Tan)

பெண்களுக்கான 10 மீட்டர் குறிசுடும் போட்டியில் சிங்கப்பூரர் அடெல் டான்(Adele Tan) பங்கேற்றார்.

அவர் தேர்வுச் சுற்றில் 21ஆவது இடத்தைப் பிடித்தார்.

22 வயதான டான், மொத்தம் 625.3 புள்ளிகளுடன் போட்டியை முடித்தார்.

கிரியா டிக்கானா (Kiria Tikana)

வாட்போரின் பெண்கள் பிரிவில், 21 வயதான சிங்கப்பூரர் கிரியா டிக்கானா அப்துல் ரஹ்மான் (Kiria Tikana Abdul Rahman) போட்டியிட்டார்.

உலகத் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள ரொமேனியாவின் அனா மரியா போபஸ்குவுக்கு (Ana Maria Popescuவுக்கு) எதிராக அவர் திறன்காட்டினார்.

15க்கு 10 என்ற புள்ளிக்கணக்கில் போபஸ்கு வெற்றிபெற்றார்.

ஜோன் போ (Joan Poh)

சிங்கப்பூரைப் பிரதிநிதித்து, படகோட்டத்தின் பெண்கள் பிரிவில் ஜோன் போ (Joan Poh) போட்டியிட்டார்.

Repechage 1 எனும், இறுதிச் சுற்றுக்குத் தேர்வு பெறாதவர்களுக்காக நடத்தப்பட்ட போட்டியில், அவர் நான்காவது இடத்தைப் பிடித்தார்.

போ எடுத்துக்கொண்ட நேரம், 8 நிமிடம் 40.06 வினாடி.

முக்கியக் காலிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெறவில்லை என்றாலும் அடுத்த சுற்றில் இடம்பிடிக்க 'E', 'F' பிரிவுகளின் அரையிறுதிச் சுற்றில் அவர் நாளை போட்டியிடுவார். 

தோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளை நேரடியாக meWATCH தளத்தின் 14 பிரத்தியேக ஒளிவழிகளில் காணலாம். meWATCH.sg/tokyo2020 என்ற இணையப்பக்கத்தை நாடுங்கள்; சிங்கப்பூரின் ஒலிம்பிக் கட்டமைப்பான மீடியாகார்ப்புடன் இணைந்திருங்கள்!

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்