Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

ஒலிம்பிக் போட்டிகளை ஜப்பானில் நடத்துவதற்கு குறையும் ஆதரவு : வாக்கெடுப்பு

ஒலிம்பிக் போட்டிகளை ஜப்பானில் நடத்துவதற்கு குறையும் ஆதரவு : வாக்கெடுப்பு

வாசிப்புநேரம் -
ஒலிம்பிக் போட்டிகளை ஜப்பானில் நடத்துவதற்கு குறையும் ஆதரவு : வாக்கெடுப்பு

(படம்: REUTERS/Dado Ruvic/Illustration)

கொரோனா கிருமிப்பரவல் காரணமாக ஏற்கனவே ஒத்திவைக்கப்பட்ட தோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை ஜப்பானில் நடத்துவதற்கு மக்களிடையே ஆதரவு வெகுவாக குறைந்துள்ளது.

இன்று வெளியிடப்பட்ட கருத்தாய்வின் முடிவில் அது தெரியவந்துள்ளது.

ஜப்பான் மூன்றாம் கட்டக் கிருமிப்பரவலை முறியடிக்கப் போராடி வருகிறது.

கியோடோ (Kyodo) செய்தி நிறுவனம் நடத்திய வாக்கெடுப்பில், ஒலிம்பிக் போட்டிகளை ரத்து செய்ய வேண்டும் அல்லது மீண்டும் ஒத்திவைக்க வேண்டும் என்று 80 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் கூறியுள்ளனர்.

நாடு முழுவதும் 1,041 பேர் கருத்தாய்வில் பங்கேற்றனர்.

இன்னொரு தடவை போட்டிகளைத் தள்ளி வைப்பது கடினம் என்றும் விளையாட்டுகள் தொடர்ந்து நடத்தப்படும் என்றும் தோக்கியோ ஒலிம்பிக் ஏற்பாட்டுக்குழுவினர் கூறினர்.

கிருமிப்பரவல் அதிகரித்து வரும் நிலையில், இந்த வாரம் தோக்கியோ வட்டாரத்தில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டது.

இருப்பினும், போட்டிகளைத் தொடர முடிவெடுக்கப்பட்டது.

ஒலிம்பிக்கைப் பாதுகாப்பாக நடத்துவதற்கு ஜப்பான் உறுதிபூண்டுள்ளதாக பிரதமர் யோஷிஹிடே சுகா (Yoshihide Suga) கூறியிருந்தார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்