Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

வெற்றிக் கதைகள்: 'ஓர் ஆசியர் முதலிடத்திலா?' டென்னிஸ் உலகை அதிர வைத்த புயல் நவோமி ஒசாக்கா

வெற்றிக் கதைகள்: 'ஓர் ஆசியர் முதலிடத்திலா?' டென்னிஸ் உலகை அதிர வைத்த புயல் நவோமி ஒசாக்கா 

வாசிப்புநேரம் -
வெற்றிக் கதைகள்: 'ஓர் ஆசியர் முதலிடத்திலா?' டென்னிஸ் உலகை அதிர வைத்த புயல் நவோமி ஒசாக்கா

படம்: REUTERS

தோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் இன்னும் சில வாரங்களில் தொடங்கவுள்ளன.

COVID-19 நோய்ப்பரவலால் துவண்டு போகாமல் இருக்க சில விளையாட்டு நட்சத்திரங்களின் வெற்றிக் கதைகளை ஒலிம்பிக்ஸ் குழு, தனது இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் பதிவு செய்து வருகிறது.

"செய்தி" ரசிகர்களுக்காக அவை, தமிழில்....

நவோமி ஒசாக்கா (Naomi Osaka) - டென்னிஸ் வீராங்கனை

நாடு: ஜப்பான்

வயது: 24

  • டென்னிஸ் உலகில் இளம் வயதிலேயே தடம் பதித்தவர் நவோமி ஒசாக்கா
  • ஜப்பானில் பிறந்த அவர் மூன்று வயதில் குடும்பத்துடன் அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்தார்
  • 1999ஆம் ஆண்டு செரீனா வில்லியம்ஸ், வீனஸ் வில்லியம்ஸ் சகோதரிகள் பிரெஞ்சுப் பொதுவிருதுப் போட்டியில் விளையாடுவதை தொலைக்காட்சியில் கண்ட ஒசாகா டென்னிஸ் மீது காதல் கொண்டார்

(படம்: REUTERS)

படம்: REUTERS

  • காதல் கனவாக மாறக் களத்தில் இறங்கினார்
  • 16 வயதில் பெரியவர்களுக்கான டென்னிஸ் அரங்கில் அடியெடுத்து வைத்தார் ஒசாகா
  • ஓர் ஆசியர் இவ்வளவு வேகமாக முன்னேறுவதைக் கண்டு டென்னிஸ் உலகம் வியந்தது

(படம்: REUTERS)

படம்: REUTERS

  • அந்த வியப்புகளை விரைவாக விருதாக மாற்றினார்
  • 2018ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்கப் பொது விருது டென்னிஸ் போட்டியின் இறுதியாட்டத்தில், தமது கனவு நாயகியான செரீனா வில்லியம்ஸைத் தோற்கடித்து முதல்முறையாகப் பொதுவிருதை வென்றார் ஒசாகா

(படம்: REUTERS)

படம்: REUTERS

  • 23 வயதில் 4 பொதுவிருதுகளை வென்றார்.
  • டென்னிஸ் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தார். அந்த சாதனையைப் படைத்த முதல் ஆசியப் பெண்மணியும் அவரே.
  • தோக்கியோ 2020 போட்டிகளில் ஜப்பானுக்குத் தங்கப் பதக்கம் வாங்கித் தர வேண்டும் என்பதில் ஒசாகா குறியாக உள்ளார்.
  • தோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளில் அவர் களம் காணக் காத்திருக்கிறது உலகம்.

(படம்: REUTERS)

படம்: REUTERS

சிங்கப்பூரின் ஒலிம்பிக் கட்டமைப்பாக மீடியாகார்ப், தோக்கியோ 2020 போட்டிகளை மிக விரிவாக உங்களுக்கு வழங்கவிருக்கிறது.

மேல்விவரங்களுக்கு mediacorp.sg/tokyo2020 என்ற இணையத்தளத்தை நாடவும்.


  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்