Images
உடற்குறையுள்ளோருக்கான ஆசிய விளையாட்டுகள் :சிறப்பாக விளையாடிய சிங்கப்பூர்
உடற்குறையுள்ளோருக்கான 2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சிங்கப்பூர் சிறப்பாகச் செயல்பட்டுள்ளது.
சிங்கப்பூர் 3 தங்கம், 2 வெள்ளி, 5 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.
இதுவரை பங்கேற்ற போட்டிகளில் இதுவே ஆக சிறந்த பதக்க எண்ணிக்கை.
சிங்கப்பூர் வென்ற மூன்று தங்கப் பதக்கங்களும் நீச்சலில் கிடைத்தவை.
பதக்கப் பட்டியில் சிங்கப்பூருக்கு 16வது இடம்.
மொத்தம் 43 நாடுகள் போட்டியில் பங்கேற்றன.
2014ஆம் ஆண்டு நடந்த போட்டியில் சிங்கப்பூர் 1 தங்கம், 1 வெள்ளி, 4 வெண்கலப் பதக்கங்களை வென்றது.
அடுத்த போட்டி 2022ஆம் ஆண்டு சீனாவில் நடைபெறவுள்ளது.

